தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

போடியில் தேவர் சிலைக்கு அவமதிப்பு: சாலை மறியல்

போடி அருகே தேவாரத்தில் தேவர் சிலையை அவமதித்ததாக கூறி சாலை மறியல் நடைபெற்றது. பதற்றமான சூழ்நிலையால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Updated On :4 நவம்பர் 2012, 11:22 am

போடி அருகே தேவாரத்தில் தேவர் சிலையை அவமதித்ததாக கூறி சாலை மறியல் நடைபெற்றது. பதற்றமான சூழ்நிலையால் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

போடியை அடுத்துள்ள தேவாரத்தில் காவல் நிலையம் முன்பாக தேவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தேவர் சிலையை சனிக்கிழமை சிலர் அவமதிப்புக்குள்ளாக்கியதாக கூறப்படுகிறது. சாணம் போன்ற பொருளை கரைத்து ஊற்றியிருந்ததாக தெரிகிறது.

இதனையடுத்து தேவாரம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து போடி டி.எஸ்.பி. கு.அருள்அமரன் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர். மேலும் போடி பகுதி முழுவதும் போலீஸார் ரோந்து சென்றனர். தேவாரத்தில் கடைகள் அடைக்கப்பட்டன.

பதற்றமான சூழ்நிலையை தவிர்க்க கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ், வட்டாட்சியர் ஜவஹர்லால் பாண்டியன் ஆகியோர் குறிப்பிட்ட சமூக மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதனையடுத்து தேவர் சிலையை கழுவி சுத்தம் செய்து, பால் அபிஷேகம் நடைபெற்றது.

இதனிடையே பிற்பகலில் சட்டப்பேரவை உறுப்பினரும், பார்வர்டு பிளாக் கட்சி தலைவருமான எஸ்.ஆர்.தமிழன் தேவாரத்திற்கு வருகை தந்தார். இதனால் மீண்டும் பதற்றம் ஏற்பட்டது. எஸ்.ஆர்.தமிழன் தலைமையில் ஏராளமானோர் தேவர் சிலையை அவமதித்தவர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி போடி-உத்தமபாளையம் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் பேருந்துகள் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.

இதனையடுத்து போலீஸார் சமாதானப்படுத்தவே சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனிடையே அடையாளம் தெரியாத நபர்கள் தேவர் சிலையை அவமதித்ததாக கூறி தேவாரம் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போடி உள்கோட்ட அளவில் தேவர் சிலை, அம்பேத்கர் சிலைகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.