லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

ராமநாதபுரம்: செல்போன் மூலம் நூதன முறையில் ரூ 9 லட்சம் மோசடி

ராமநாதபுரம், ஜூலை.3: ராமநாதபுரம் அருகே பரமக்குடியைச் சேர்ந்த சோனைமுத்து என்பவரிடம் செல்போன் மூலம் நூதன முறையில் ரூ 9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது. பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து(42). இ

Updated On :19 செப்டம்பர் 2012, 5:08 pm

ராமநாதபுரம், ஜூலை.3: ராமநாதபுரம் அருகே பரமக்குடியைச் சேர்ந்த சோனைமுத்து என்பவரிடம் செல்போன் மூலம் நூதன முறையில் ரூ 9 லட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளது.

பரமக்குடி பாலன் நகரைச் சேர்ந்தவர் சோனைமுத்து(42). இவர் குவைத்தில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் பவுண்டுகள் பரிசு விழுந்துள்ளதாக செல்போனில் எஸ்எம்எஸ் வந்துள்ளது. அந்த செல்போன் எண்ணைத் தொடர்புகொண்டு பேசியபோது லண்டனைச் சேர்ந்த மார்க்கஸ் ஒயிட்டும், மும்பையைச் சேர்ந்த ரோஹிதாவும் ரூ 9 லட்சம் பணம் கட்டுமாறு கூறியுள்ளனர். இதையடுத்து ஐசிஐசிஐ வங்கியில் மெகா ரிவர் சேல்ஸ் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் சோனைமுத்து ரூ 9 லட்சம் பணம் கட்டியுள்ளார். மேலும் ரூ 5 லட்சம் பணம் கட்டும்படி கூறியதால் சந்தேகமடைந்த சோனைமுத்துவின் மனைவி முத்துலட்சுமி இதுதொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து மார்க்கஸ் ஒயிட், ரோஹிதா ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.