மேற்கு வங்கம்: 3 மணி நிலவரப்படி 78.77% வாக்குகள் பதிவு!வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! பகல் 3 மணி... அதிகபட்சமாக நாமக்கல் மாவட்டத்தில் 76.43 சதவீத வாக்குகள் பதிவு!தமிழகத்தில் பகல் 3 மணி வரை 70% வாக்குப்பதிவு!எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!
/

சாதிச் சான்றிதழ் கோரி மாணவ, மாணவியருடன் உண்ணாவிரதம்

சேலம், ஆக. 27: சேலத்தில் சாதிச் சான்று வழங்கக் கோரி பள்ளி மாணவ-மாணவியருடன் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.  சேலம் மாவட்டம் மல்லூர், தாதகாப்பட

Updated On :26 செப்டம்பர் 2012, 6:03 am

சேலம், ஆக. 27: சேலத்தில் சாதிச் சான்று வழங்கக் கோரி பள்ளி மாணவ-மாணவியருடன் அமைப்புசாரா தொழிற்சங்கத்தினர், பொதுமக்கள் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டனர்.

 சேலம் மாவட்டம் மல்லூர், தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, பனைமரத்துப்பட்டி, வெண்ணந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த உப்பிலியா, உப்பரா, சகரா இன மாணவ-மாணவிகள் ஏராளமானோர் பள்ளி, கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இந்த நிலையில் இவர்களுக்கு சாதிச் சான்று மறுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

 இது குறித்து பல முறை வட்டாட்சியர், ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் மனு அளித்தும் சாதிச் சான்று வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து கட்டுமான அமைப்புசாரா தொழிற்சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பள்ளி மாணவ-மாணவிகளுடன் ஆட்சியர் அலுவலகம் அருகே திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 போராட்டத்துக்கு ஜெய் ஜவான் ஜெய் கிஸான் மஸ்தூர் பெடரேஷன் மாநிலச் செயலர் ஏ.சையத் அமின் தலைமை தாங்கினார். ஆர்.பெரியசாமி, பி.ராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

 போராட்டத்தில், பிற்பட்ட வகுப்பைச் சேர்ந்த உப்பிலியா, உப்பரா, சகரா சமுதாயத்தைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சாதிச் சான்று வழங்க வேண்டும், பி.மேட்டூர் உப்பிலிய தெருவில் உள்ள மயானத்துக்கு சுற்றுச் சுவர் அமைக்க வேண்டும், சேலத்தாம்பட்டியில் உள்ள இந்திய உணவுக் கிடங்கிற்கு வரும் லாரிகளுக்கு மாற்றுப் பாதை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பலர் பேசினர்.

 போராட்டத்தில் எஸ்.பி.ஆறுமுகம், சேவியர் ஆண்டனி, எம்.வெங்கட்ராமன், ஜி.வேலாயுதம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.