'கல்யாணமானால் பொறுப்பு தானாக வந்துவிடும்...'
'உண்மைதான்... நான் இப்போதுதான் ரேஷன் கடையில பருப்பு வாங்கிட்டு வருகிறேன்.'
-நடேஷ் கன்னா, கல்லிடைக்குறிச்சி.
'ஹலோ எப்ப வந்தா டாக்டரை ஆஸ்பத்திரியில பார்க்கலாம்?'
'எப்ப வந்தாலும் பார்க்கலாம்... டாக்டரே உடம்பு சரியில்லாம ஆஸ்பத்திரியிலதான் அட்மிட் ஆகியிருக்காரு!'
-தீபிகா சாரதி, சென்னை -5.
'என்னது... தாடி வச்சுக்காம அந்தப் படத்துல சாமியார் பாத்திரத்தில் நடிச்சியா?'
'ஆமாம், நான் நடிச்சது போலி சாமியார் ரோலில்தானே!'
'உங்களுக்குப் பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டப் போகுது...'
'நீங்க எவ்வளவு பில்டப் கொடுத்தாலும், வழக்கமா குடுக்குற பத்து ரூபாய்க்கு மேல உங்களுக்குத் தரமாட்டேன், ஜோசியரே!'
-பர்வீன் யூனுஸ், சென்னை.
'அரை மணி நேரம் அவங்ககிட்ட என்ன பேசினே..?'
'சேதி எதுவும் இல்லைன்னு சொல்லி, சும்மா
பேசிக்கிட்டிருந்தேன்.'
'நீங்கதான் இந்தக் குடும்பத்தின் தலைவரா?'
'அப்படித்தான் நினைச்சிட்டு இருக்கேன். எதற்கும் உள்ளே ஒரு வார்த்தை கேட்டுடு!'
'உன் முகம் ஏன் இப்படி கறுத்துப் போச்சு?'
'கடன் கொடுத்தவன் வறுத்து எடுத்துட்டுப் போயிட்டான்!'
- பர்வதவர்த்தினி, பம்மல்.
'இந்த வீட்டுல நான் இருக்கணுமா... உங்க அம்மா இருக்கணுமான்னு நீங்களே முடிவு பண்ணிக்கோங்க!'
'நீங்க ரெண்டுபேரும் இங்கே இருங்க... நான் எங்காவது கிளம்பிடறேன்!'
'படுத்தா தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்!'
'மனைவிக்குத் தெரியாமல் யாருக்காவது கடன்கொடுத்திருக்கீங்களா..?'
'பொண்டாட்டி உடம்புல குந்து மணி நகைகூட இல்லாம வச்சிருக்கீயே, உனக்கெல்லாம் எதுக்குய்யா கல்யாணம்?'
'நல்லாக் கேளுங்கண்ணே. கொஞ்சம் இருங்க, காபி தர்றேன்... குடிச்சிட்டுப் போங்கண்ணே!'
'விருந்தாளிங்க அநேகமா இன்னைக்கே கிளம்பினாலும் கிளம்பிடுவாங்க..!'
'எதைவச்சுச் சொல்றீங்க?'
'எவ்வளவு நாள் தங்கற மாதிரி பிளான்னு கேட்டேன். அது, உங்க உபசரிப்பைப் பொறுத்ததுன்னு சொன்னாங்க!'
'தூக்கத்துல நடக்கிற வியாதிக்கு நீங்க கொடுத்த மருந்து பயங்கரமா வேலை செய்யுது, டாக்டர்!'
'எப்படி?'
'அந்த மருந்தை சாப்பிட்டதுலேர்ந்து நான் துக்கத்துல ரிவர்ஸ்ல நடக்கிறேன், டாக்டர்!'
'உங்க வீட்டுக்கு சமீபத்துல திருடனா வந்தான்?'
'ஆமா... ஏன் கேக்கற?'
'வீடு சுத்தமா துடைச்சு வச்ச மாதிரி இருக்கே!'
'எதிரி நம்மை மிகவும் கேவலமாகப் பேசுகிறானாம், மன்னா!'
'கேவலமோ, கீவலமோ ... நம்மைப் பற்றி அவன் பேசுவதே நமக்கு பெருமைதானே?'
'எதிரி மன்னனிடமிருந்து ' கிஸ்தியா? குஸ்தியா?' என்று கேட்டு ஓலை வந்திருக்கிறது, மன்னா!'
'குஸ்தி என்றால் அஸ்தி தான் அமைச்சரே! ஆகையால், கிஸ்தியை அனுப்பிவிடலாம்!'
-வி.ரேவதி, தஞ்சை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


