5 முறை சாம்பியன் பிரேசிலுக்கு அதிர்ச்சி: காலிறுதியில் நார்வே!அதிபா் டிரம்ப்புடன் புதின், ஸெலென்ஸ்கி தொலைபேசியில் பேச்சு!உத்தரப் பிரதேசத்தில் 3-வது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும்: நிதின் நபின் நம்பிக்கைபிகாா் இடைத்தோ்தல்: பிரசாந்த் கிஷோா் போட்டிமின் இணைப்புக்கு காத்திருக்கும் 60,120 விவசாயிகள்!இன்று கரையைக் கடக்கிறது புயல் சின்னம்!
/

கோடைக்கேற்ற கொடை

வந்து சென்ற கோடையிலே சென்று வந்தோம் கொடைக்கானலே!

News image

கோப்புப் படம்

Updated On :21 ஜூன் 2026, 4:03 am IST

வந்து சென்ற கோடையிலே

சென்று வந்தோம் கொடைக்கானலே!

வளைந்து ஏறிய பாதையிலே

வண்டிகள் பலவும் வந்தனவே!

-

உயர உயரப் போகையிலே

அழகாய்ச் சூழ்ந்தன மேகங்களே!

மலையில் மலர்ந்த மலர்களும்

மனது மயங்க மணத்ததுவே!

-

பக்கம் இரண்டிலும் பசுமையாய்

பலவகை மரங்களின் அடர்த்தியே!

குளிர்ந்த கருமை மேகங்களால்

குளிர்ச்சி எங்கும் நிறைந்ததுவே!

-

குதித்துத் தாவிடும் குரங்குகளும்

குறும்புகள் செய்திடக் கண்டோமே!

உச்சி நெருங்கிடும் உயரத்திலே

உள்ளம் மயக்கும் காட்சிகளே!

-

வளைந்து படுத்த பாம்பெனவே

வந்த பாதையும் தெரிந்ததுவே!

தரையில் தெரிந்த எல்லாமே

தெரிந்தன சிறிய பொம்மைகளாய்!

-

உள்ளமும் உடலும் மகிழ்ந்திடவே

உல்லாச மலையாம் கொடைக்கானலே!

எஸ்.ஆர்.ஜி.சுந்தரம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.