மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இது தெரியுமா? முழங்கை இடித்துக் கொண்டால் 'ஷாக்' அடித்தது போன்ற உணர்வு ஏற்படுவது ஏன்?

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய அரிய தகவல் குறித்து...

News image

முழங்கை (கோப்புப்படம்) - படம்: TNIE

Updated On :9 ஏப்ரல் 2026, 1:39 pm

நமது முழங்கை தற்செயலாக எதிலாவது இடித்துக் கொண்டால் 'ஷாக்' (மின்சார அதிர்ச்சி) அடித்தது போன்ற உணர்வு ஏற்படுகிறதே ஏன்?

இதற்குக் காரணம் என்ன? இந்த உணர்ச்சியை நம்மில் பலரும் அனுபவித்திருப்போம். முழங்கை தற்செயலாக மேஜையின் முனையில் இடித்துவிட்டாலோ, வேறு ஏதாவது கடினமான பொருளின் மீதோ இடித்தாலோ இந்த உணர்வு எல்லோருக்கும் ஏற்படும். இது ஏறக்குறைய 'ஷாக்' அடித்தது போலவே இருக்கும்.

இதற்குக் காரணம் முழங்கையில் இருக்கும் (funny bone) நகைச்சுவை எலும்பு என்று பலர் கூறுவர். ஆனால், உண்மையில் இப்படியொரு எலும்பு கிடையாது.

முழங்கையின் முனையில் இருக்கும் உல்நார் நரம்பு (ulnar nerve) என்ற நரம்புதான் இதற்குக் காரணம். இது உடம்பின் பல பகுதிகளை இணைக்கும் மிக நீண்ட நரம்பாகும்.

இது முழங்கையில் இருக்கும் எலும்புடன் இணைக்கப்பட்டிருக்கிறது. முழங்கையில் இந்த எலும்பு மிகவும் மெல்லிய தோல் மற்றும் கொழுப்பு குறைவான பகுதியில் உள்ளதால், இது எளிதில் பாதிக்கப்படுகிறது.

இதனால்தான் 'ஷாக்' அடிக்கும் உணர்வு ஏற்படுகிறதே தவிர, இதனால் எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே பயப்பட வேண்டாம். இதனால்தான் இந்த எலும்பை நகைச்சுவை எலும்பு என்று அழைக்கிறார்கள் போலும்.

Summary

About rare information that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.