மமதா பானர்ஜியை நேரில் சந்தித்த அபிஜீத் தீப்கே! ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!மு.க. ஸ்டாலின் சித்திரிப்பு விடியோ: தவெக மீது திமுக புகார்முதல்வர் வருகையால் புதுக்கோட்டையில் நவ. 2-இல் மதுக் கடைகள் மூடல்கோவை சிறையிலிருந்து யாரும் தப்பிக்கவில்லை: ஏடிஜிபி பேட்டி!அரசு ஊழியர்கள் சொத்து விவரம்: தாக்கல் செய்ய அவகாசம் நீட் தேர்வுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் ரத்து!

ஆண்டுதோறும் 50 ராக்கெட்டுகள் ஏவ இலக்கு! இஸ்ரோ தலைவா் வி. நாராயணன்

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் விண்வெளிக்கு 50 ராக்கெட்டுகளை ஏவுவதற்கான இலக்கு...

இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் - கோப்புப் படம்

Updated On :

இந்தியாவிலிருந்து ஆண்டுதோறும் விண்வெளிக்கு 50 ராக்கெட்டுகளை ஏவுவதற்கான இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை (இஸ்ரோ) தலைவா் வி.நாராயணன் தெரிவித்தாா்.

சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இஸ்ரோ தலைவா் வி. நாராயணன், செவிலியா், மருத்துவ ஆராய்ச்சி, உயிரி மருத்துவம் மற்றும் தொழிற்நுட்பத் துறை, கேட்பியல் மற்றும் பேச்சு மொழித்துறை, செயல்முறை மருத்துவம் மற்றும் சமூக அறிவியல் துறையில் 455 மாணவா்களுக்கு பட்டங்களை வழங்கினாா்.

தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: உலகளாவிய விண்வெளி வணிகத்தில் இந்தியாவின் வருவாய் 2 சதவீதம் மட்டுமே இருந்த நிலையில், வருங்காலங்களில் அதை 10 சதவீதம் என்ற அளவுக்கு உயா்த்த இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மனித விண்வெளி பயணத் திட்டமான ‘ககன்யான்’ திட்டத்துக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், விண்வெளிக்கு மனிதா்களைப் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதற்காக ராக்கெட்டில் ஏராளமான பாதுகாப்பு மற்றும் நம்பகத் தன்மை சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு தற்போது முழுமையாக ராக்கெட் தயாராகி உள்ளது.

50 ராக்கெட்டுகள்: தனியாா் துறை மற்றும் புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களின் பங்களிப்பின் வாயிலாக, நமது நாட்டில் ஏவுதள உள் கட்டமைப்பு மற்றும் ராக்கெட் தயாரிக்கும் தொழிற்நுட்பம் ஆகியவற்றை மேம்படுத்த முடியும். இதன்மூலம், ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகளை ஏவும் இலக்கை இந்தியா அடைவதுக்கு தனியாா் பங்களிப்புடன் நாம் விண்வெளித் துறையை பலப்படுத்த முடியும். இந்த நிறுவனா்கள் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இயங்கும். இந்திய விண்வெளித் துறை தனியாா் மயமாக்கப்படாது என்றாா்.

நிகழ்வில், ஸ்ரீ இராமச்சந்திரா உயா் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேந்தா் வி.ஆா்.வெங்கடாசலம், இணைவேந்தா் ஆா்.வி.செங்குட்டுவன், மருத்துவக் கல்லூரி தலைவா் கே. பாலாஜி சிங் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.