இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

இடைத்தேர்தல்! புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் வாக்கு எண்ணிக்கை - நேரலை!!

புதுச்சேரி, மேற்கு வங்கம் - பேரவைத் தொகுதிகள் மற்றும் அஸ்ஸாம் மக்களவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேரலை செய்திகள்.

05/10/2026, TN, PONDICHERRY: Regarding the voting for the By-election to be held tomorrow EVM and VVPAT Machines being shifted from Counting Centre at

வாக்கு எண்ணிக்கை - ENS

Updated On :
3:21 am, 9 அக்டோபர் 2026

மக்களவைத் தொகுதி

அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு மக்களவைத் தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியிருக்கிறது.

3:21 am, 9 அக்டோபர் 2026

இந்தியாவில் தமிழ்நாடு, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 5 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

3:21 am, 9 அக்டோபர் 2026

5 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்

தமிழ்நாட்டில் இரண்டு தொகுதிகளுக்கும், புதுச்சேரியின் தட்டாஞ்சாவடி தொகுதிக்கும், மேற்கு வங்கத்தில் ரெஜிநகர், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

அஸ்ஸாமில் நாகோன் மக்களவைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்று இன்று முடிவுகள் வெளியாகவிருக்கின்றன.

3:37 am, 9 அக்டோபர் 2026

தட்டாஞ்சாவடி  - தபால் வாக்கு

புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு உள்பட்ட தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் மொத்த தபால் வாக்குகள் 112. வீடுகளுக்கு சென்ற பெற்றவை-104. தேர்தல் நடத்தும் அதிகாரி அலுவலகத்தில் பதிவானவை-5. சர்வீஸ் வாக்கு-3

3:37 am, 9 அக்டோபர் 2026

சுற்று - தபால் வாக்கு

அசோக் ஆனந்த் (என்.ஆர் காங்கிரஸ்) - 63

விநாயகம் (காங்கிரஸ்) - 26

சேது செல்வம் (திமுக) - 8

சலீம் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி) -3

கார்த்திக் குமாரி (நாம் தமிழர் கட்சி) -1

செல்லாதவை - 8

3:51 am, 9 அக்டோபர் 2026

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்

தபால் வாக்குளில் என்ஆர் காங்கிரஸ் முன்னிலை வகித்து வருகிறது.

4:57 am, 9 அக்டோபர் 2026

மேற்கு வங்கம் இடைத்தேர்தல்! முன்னிலை நிலவரம்

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு, முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

5:03 am, 9 அக்டோபர் 2026

தட்டாஞ்சாவடி முன்னிலை நிலவரம்

அசோக் ஆனந்தன் - 6950

விநாயகம் - 2392

சேது செல்வம் - 1534

4558 வாக்குகள் வித்தியாசத்தில்

என்ஆர் காங்கிரஸ் முன்னிலை

5:16 am, 9 அக்டோபர் 2026

அஸ்ஸாம் நாகோன் மக்களவைத் தொகுதி: பாஜக முன்னிலை! காங்கிரஸ் 3-ம் இடம்! 

அஸ்ஸாம் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா முன்னிலை வகித்து வருகிறார்.

6:46 am, 9 அக்டோபர் 2026

பாஜக முன்னிலை!

மேற்கு வங்கத்தில் ரெஜிநகா், நந்திகிராம் ஆகிய இரு பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பாஜக முன்னிலை வகித்து வருகின்றது.

7:34 am, 9 அக்டோபர் 2026

அஸ்ஸாம் மக்களவைத் தொகுதியைக் கைப்பற்றுகிறது பாஜக!

அஸ்ஸாம் மாநிலம் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா 82,000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

12:30 pm, 9 அக்டோபர் 2026

புதுச்சேரி தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் (61.12%) பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.