புதுச்சேரி தட்டாஞ்சாவடி: என்ஆர் காங்கிரஸ் வெற்றி
தட்டாஞ்சாவடி தொகுதியில் என்ஆர் காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் வெற்றி பெற்றது குறித்து...
முதல்வர் என்.ரங்கசாமியுடன் அசோக் ஆனந்த்
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் வேட்பாளர் ஆ. அசோக் ஆனந்த் 13,358 வாக்குகள் (61.12%) பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார்.
இத்தொகுதிக்கான வாக்குப் பதிவு கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி வெள்ளிக்கிழமை லாஸ்பேட்டை மோதிலால் நேரு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அதிகாரி அர்ஜூன் ராமகிருஷ்ணன் வெற்றிக்கான சான்றிதழை அசோக் ஆனந்திடம் வழங்கினார். மாவட்ட தேர்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.
வாக்கு நிலவரம்:
ஆ. அசோக் ஆனந்த் (என்.ஆர். காங்கிரஸ்): 13,358 வாக்குகள் (முதல் இடம்)
இ. விநாயகம் (காங்கிரஸ்): 4,876 வாக்குகள் (இரண்டாம் இடம்)
கு. சேது செல்வம் (திமுக): 2,664 வாக்குகள் (மூன்றாம் இடம்)
அ.மு. சலீம் (இந்திய கம்யூனிஸ்ட்): 310 வாக்குகள் (நான்காம் இடம்)
இத்தொகுதியில் மொத்தம் 26,921 வாக்காளர்கள் உள்ள நிலையில், 21,756 பேர் வாக்களித்தனர் (80.81% வாக்குப்பதிவு). கடந்த பொதுத் தேர்தலில் முதல்வர் என். ரங்கசாமி பெற்ற வாக்குகளைக் காட்டிலும் (10,024), அசோக் ஆனந்த் 3,334 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.
சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் தட்டாஞ்சாவடி மற்றும் மங்கலம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்டு முதல்வர் என். ரங்கசாமி வெற்றி பெற்றார். மங்கலம் தொகுதியை வைத்துக் கொண்டு, தட்டாஞ்சாவடி தொகுதியை அவர் ராஜிநாமா செய்ததால் தற்போது இடைத்தேர்தல் நடைபெற்றது.
வெற்றிச் சான்றிதழுடன் திலாசுபேட்டையில் உள்ள முதல்வர் என். ரங்கசாமி இல்ல வளாகத்தில் அமைந்துள்ள அப்பா பைத்தியம் சுவாமிகள் கோயிலுக்கு இரண்டு சக்கர வாகனத்தில் தொண்டர்கள் சூழ வந்த அசோக் ஆனந்த், முதல்வரிடம் சான்றிதழைக் கொடுத்து காலில் விழுந்து ஆசி பெற்றார்.
அப்போது சட்டப்பேரவைத் தலைவர் ஆ. அன்பழகன், அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் உடனிருந்தனர்.
இந்த வெற்றி குறித்துப் பேசிய முதல்வர் என். ரங்கசாமி, "இது ஆட்சிக்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றி. வாக்களித்த தட்டாஞ்சாவடி மக்களுக்கு நன்றி. தொகுதி மேம்பாட்டுக்காகச் சிறந்த முறையில் பணியாற்றக்கூடிய சட்டப்பேரவை உறுப்பினர் கிடைத்துள்ளார்" என்று தெரிவித்தார். வெற்றி பெற்ற அசோக் ஆனந்த், முதல்வரின் அரவணைப்பும், கூட்டணித் தலைவர்களின் கடுமையான உழைப்புமே இந்த வெற்றிக்குக் காரணம் என்றார்.
இடைத்தேர்தல் வெற்றி பெற்றதையடுத்து, என்.ஆர். காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மேளதாளங்களுடன் கொண்டாடினர்.
Summary
NR Congress wins in Thattanchavady constituency
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

