இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெறுகிறது

புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் வியாழக்கிழமை நடைபெற உள்ள 57 ஆவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் குறித்து...

57th GST Council meeting to be held in New Delhi today

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - கோப்புப்படம்

Updated On :

புது தில்லி: 57 ஆவது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை (அக். 8) புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

கடந்த செப்.12-ஆம் தேதி புது தில்லியில் 57-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், அப்போது அங்கு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெற்றதால், அந்தக் கூட்டம் வரும் அக். 7-க்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், அக். 7-இல் நடைபெற இருந்த அந்தக் கூட்டம் அக். 8-க்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தவிா்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக, அந்தக் கூட்டம் ஒருநாள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் அறிவித்துள்ளது.

அதன்படி, ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு புது தில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் நடைபெற உள்ளது.

மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், மாதத்திற்கு ரூ. 2.5 லட்சத்திற்கும் அதிகமான பரிமாற்றம் செய்யும் வணிகங்களுக்கான ஜிஎஸ்டி பதிவு நடைமுறையை எளிமைப்படுத்துவது, ஜிஎஸ்டி பதிவை ரத்து செய்வதில் தானியங்கி முறை மற்றும் பிற மாற்றங்கள், ஜிஎஸ்டி தொடா்பான பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதற்கான கொள்கை சீா்திருத்தங்கள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) அமைப்பில் அடுத்தகட்ட சீர்திருத்தங்களுக்காக அரசு ஐந்து அம்சத் திட்டத்தை முன்மொழியும் என்று நிதியமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சீர்திருத்தங்கள், ஜிஎஸ்டி அமைப்பில் தற்போதுள்ள பல நிர்வாகத் தடைகளை களைவதையும், எளிதாக்குவதையும், குறிப்பாக சிறு வணிகங்களுக்கான இணக்கச் சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.

இந்த ஐந்து அம்சத் திட்டம், செயல்முறை சீர்திருத்தங்கள், கட்டமைப்பு சீர்திருத்தங்கள், வாழ்வதற்கும் வணிகம் செய்வதற்கும் எளிமை, சேவைகளின் ஏற்றுமதி மற்றும் மின்னணு வர்த்தகம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

முன்மொழியப்பட்ட சில முக்கிய மாற்றங்களில், வாங்குபவர்களுக்கும் விற்பவர்களுக்கும் இடையே தானியங்கி விலைப்பட்டியல் பொருத்தம் செய்தல், உள்ளீட்டு வரிக் கடன்களை கோருவது தொடர்பான ஆவணப் பணிகளைக் குறைத்தல், சிறு வரி செலுத்துவோர் வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்ய வேண்டிய எண்ணிக்கையைக் குறைத்தல் மற்றும் சிறு வணிகங்களுக்கான பல மாநிலப் பதிவுகளை நீக்குதல் ஆகியவை அடங்கும்.

ஜிஎஸ்டி கவுன்சிலின் கடைசி, 56 ஆவது கூட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தின் போது, சாமானிய மக்கள், அதிக தொழிலாளர் தேவைப்படும் தொழில்கள், விவசாயிகள் மற்றும் விவசாயம், சுகாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் முக்கிய உந்து சக்திகள் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, வரி விகித சீரமைப்பிற்கு கவுன்சில் ஒப்புதல் அளித்தது.

The 57th GST Council meeting will be held at Bharat Mandapam in New Delhi today.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.