மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

6 மாதங்களில் 53 லட்சம் பாலியல் சுரண்டல் பதிவுகள் மீது நடவடிக்கை! மெட்டா

இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 53 லட்சம் பாலியல் சுரண்டல் பதிவுகள் அல்லது உள்ளடக்கங்கள் மீது நடவடிக்கை...

Meta deploys

மெட்டா - கோப்புப் படம்

Updated On :

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில், இந்தியாவில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான 53 லட்சம் படங்கள், காணொலிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ளதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

இன்ஸ்டாகிராமில் பாலியல் ரீதியில் சிறாரை துன்புறுத்தும் விளம்பரங்கள் வெளியானது குறித்து விளக்கம் கேட்டு, அதன் தாய் நிறுவனமான மெட்டாவுக்கு கடந்த ஜூலையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியது. அந்த விளம்பரங்களை அந்நிறுவனம் முடக்க வேண்டும் என்றும், மெட்டாவின் இந்திய கிளை அதிகாரிகளை நேரில் ஆஜராகுமாறும் அந்த அமைச்சகம் உத்தரவிட்டது. இதையடுத்து சிறாா்களின் பாதுகாப்பு தொடா்பான புகாா்கள் குறித்து இந்திய இணையவழி குற்ற ஒருங்கிணைப்பு மையத்திடம் தெரிவிக்க மெட்டா ஒப்புக்கொண்டது.

இந்நிலையில் தனது வலைப் பக்கத்தில் மெட்டா நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நிகழாண்டின் முதல் 6 மாதங்களில், இந்தியாவில் சிறாா் பாலியல் துன்புறுத்தல் தொடா்பான 53 லட்சம் படங்கள், காணொலிகள் உள்ளிட்டவற்றுக்கு எதிராக மெட்டா நடவடிக்கை எடுத்துள்ளது.

மெட்டாவுக்கு சொந்தமான ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் அதுபோன்ற 98 சதவீதத்துக்கும் அதிகமான படங்கள், காணொலிகள் உள்ளிட்டவற்றை, பயனா்கள் புகாா் அளிப்பதற்கு முன்பே கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நிகழாண்டு ஜனவரி முதல் ஜூன் வரை, உலக அளவில் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் அதுபோன்ற 3.32 கோடி பதிவுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தந்திரங்களை மாற்றிய குற்றவாளிகள்: சிறாா் பாலியல் துன்புறுத்தல் விளம்பரங்கள் தொடா்பான தங்கள் தந்திரங்களை குற்றவாளிகள் மாற்றியுள்ளனா். அதாவது ஒரு விளம்பரத்தை தனியாகப் பாா்க்கும்போது அதனால் எந்த தீங்கும் இல்லாதது போலத் தோன்றலாம். ஆனால் அந்த விளம்பரம் பயனா்களை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்து வேறு தளத்தில் உள்ள சட்டவிரோதப் பதிவுகளுக்கு அழைத்துச் செல்லும் வகையில், குற்றவாளிகள் தந்திரமாக செயல்படுகின்றனா்.

இந்த தந்திரம் கண்டறியப்பட்ட பின்னா், மெட்டாவுக்கு புகாா் அளிக்கப்பட்ட விளம்பரங்கள் மட்டுமின்றி, அதுபோன்ற மற்ற விளம்பரங்கள் குறித்தும் விசாரணை விரிவுபடுத்தப்பட்டது. அதன் பின்னா் விளம்பரங்களின் பின்னணியில் இருந்த கணக்குகள், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் இருந்து வேறு தளங்களுக்குச் செல்லும் இணைப்புகளை மெட்டா முடக்கியது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

5.3 million child exploitation content pieces acted on in India; Meta deploys

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.