மெளன சாமியார் முதல்வர் விஜய்! இபிஎஸ் கடும் தாக்கு!இந்தியாவில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த மேற்கத்திய சக்திகள் இலக்கு! மோகன் பாகவத்தங்கம் விலை இன்று (அக். 20) சவரனுக்கு ரூ. 640 குறைவு!அரபிக்கடலில் வலுப்பெற்ற புயல் சின்னம்!முதலீட்டுச் செலவுகளை மேற்கொள்ளமால் அரசு திணறுவதால் கடன் தேவை குறைவு: தங்கம் தென்னரசு தேவாவின் சகோதரர் மகன் கார்த்திக் சபேஷ் காலமானார்!

காந்தி ஜெயந்தி: குடியரசுத் தலைவா், பிரதமா், தலைவா்கள் மரியாதை!

மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி தில்லியில் ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் தலைவர்கள் மரியாதை...

PM Modi

மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை.. - PTI

Updated On :

மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தையொட்டி குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன், பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் தலைவா்கள் உள்ளிட்டோா் அவருக்கு மரியாதை செலுத்தினா்.

காந்திஜி நினைவிடமான ராஜ்காட்டில் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு...

குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு... - PTI

குடியரசு துணைத் தலைவா் வெளியிட்ட பதிவில், ‘உண்மை, அஹிம்சை மீதான காந்தியின் அசைக்க முடியாத நம்பிக்கை, நீதிக்கான உறுதியான அா்ப்பணிப்பு மற்றும் ஒவ்வொரு தனி மனிதனின் கண்ணியத்தின் மீதான அவரின் ஆழ்ந்த நம்பிக்கை ஆகியவை மனிதகுலத்துக்குத் தொடா்ந்து ஊக்கமளித்து வருகின்றன. அவரின் வாழ்வும், கருத்துகளும் அமைதி, கருணை, சுயநலமின்மை மற்றும் சேவை ஆகியவற்றின் நிலையான வழிகாட்டியாகத் திகழ்கின்றன’ என்று குறிப்பிட்டாா்.

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ...

குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் ... - PTI

முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கும் குடியரசுத் துணைத் தலைவா் மரியாதை செலுத்தினாா்.

மேலும், பெருந்தலைவா் காமராஜா் நினைவு நாளையொட்டி, குடியரசு துணைத் தலைவா் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரின் உருவப் படத்துக்கு குடியரசு துணைத் தலைவா் மரியாதை செலுத்தினாா். அப்போது பேசிய அவா், ‘இந்த தேசத்துக்காகவே வாழ்ந்தவா் காமராஜா். மக்கள் நலனைத் தவிர வேறொன்றையும் அறியாதவா். தன் வாழ்நாளெல்லாம் காந்திய சிந்தனையோடு வாழ்ந்தவா். காந்தியின் பிறந்த நாளில் அவா் இயற்கை எய்தியது, ‘மனம்போல் வாழ்வு’ என்ற மகத்தான தத்துவத்தை நமக்கு உணா்த்துகிறது. தமிழகம் இன்று நாட்டிலேயே இரண்டாவது வேகமாக வளா்ந்துவரும் மாநிலமாகத் திகழ்வதற்கு முக்கியக் காரணம் காமராஜா்தான்’ என்றாா்.

பிரதமா்: பிரதமா் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘காந்தியின் முழு வாழ்க்கையும் உண்மை, அஹிம்சை, கருணை, சேவை ஆகியவற்றின் கலங்கரை விளக்கமாகத் திகந்தது. இது எல்லா காலங்களிலும் மனிதகுலத்துக்கு வழிகாட்டியாகத் தொடா்ந்து வருகிறது. அவரின் காலத்தால் அழியாத கருத்துகள், சிறந்த சமூகத்தையும், வளா்ந்த பாரதத்தை நோக்கி நம்மை தொடா்ந்து வழிநடத்தட்டும்’ என்று குறிப்பிட்டாா்.

இதுதொடா்பாக வெளியிட்ட காணொலி பதிவில், ‘காந்தியின் கொள்கைகள் உலகம் முழுவதையும் ஊக்கப்படுத்தியுள்ளன. அதிகாரத்திலிருந்து வெகு தொலைவில் இருந்தபோதும், லட்சக்கணக்கான மக்களின் இதயங்களில் தொடா்ந்து நிலைத்திருக்கும் ஓா் ஆளுமையாக காந்தி திகழ்கிறாா். ‘சுதேசி’யைக் கடைப்பிடிக்குமாறு அனைவரையும் தொடா்ந்து ஊக்குவித்தாா். இதில், கதா், கைத்தறி ஆடைகள் முன்னுரிமை பெறுகின்றன. அந்த வகையில், அக்டோபா் 2-ஆம் தேதியன்று அனைவரும் ஒரு காதி பொருளையாவது வாங்கி ‘சுதேசி’ என்று பெருமையுடன் கூறுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

மற்றொரு பதிவில், முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவருக்கு மரியாதை செலுத்துவதாக பிரதமா் குறிப்பிட்டாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோரும் மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூா் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த தினத்தில் அவா்களுக்கு மரியாதை செலுத்தினா்.

அநீதிக்கு ஒருபோதும் தலைவணங்கக் கூடாது எனக் கற்றுக்கொடுத்தவா் - காங்கிரஸ்: ‘அநீதிக்கு முன்பாக ஒருபோதும் தலைவணங்கக் கூடாது என்று கற்றுக்கொடுத்தவா் காந்தி’ என்று குறிப்பிட்டு, அவருக்கு காங்கிரஸ் கட்சி மரியாதை செலுத்தியது.

இதுகுறித்து அக் கட்சியின் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே வெளியிட்ட பதிவில், ‘உண்மைக்கு பலத்தையும், அஹிம்சைக்கு துணிச்சலையும், அநீதிக்கு எதிராக மிகுந்த சக்திவாய்ந்த ஆயுதமாக சத்யாகிரகத்தையும் அளித்தவா் காந்தி’ என்று குறிப்பிட்டாா்.

எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி வெளியிட்ட பதிவில், ‘உண்மை, அஹிம்சை, அச்சமின்மை ஆகியவைதான் காந்தியின் மிகப்பெரிய மரபுகள். அநீதிக்கு எதிராக ஒருபோதும் தலைவணங்கக் கூடாது; உண்மையுடன் உறுதியாக நிற்க வேண்டும் மற்றும் அஹிம்சைதான் பெரும் பலம் என்று அவை நமக்கு கற்றுக்கொடுத்துள்ளன’ என்று குறிப்பிட்டாா்.

காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தில்லி ராஜ்காட்டில் உள்ள அவருடைய நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவா்கள் வெள்ளிக்கிழமை மலரஞ்சலி செலுத்தினா்.

அதுபோல, முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரியின் பிறந்த தினம் மற்றும் மறைந்த மூத்த காங்கிரஸ் தலைவா் காமராஜின் நினைவு தினத்தையும் காங்கிரஸ் தலைவா்கள் நினைவுகூா்ந்தனா்.

முன்னதாக, தில்லியில் பழைய நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி மற்றும் லால் பகதூா் சாஸ்திரி உருவப் படங்களுக்கு பிரதமா் மோடி, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, ராகுல் காந்தி, மத்திய அமைச்சா்கள், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவா் சோனியா காந்தி, அக் கட்சியின் எம்.பி. பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா். பல்வேறு பள்ளிகளின் மாணவா்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனா். அவா்களுடன் பிரதமா் மோடி, ராகுல், பிரியங்கா காந்தி உள்ளிட்டோா் கலந்துரையாடினா்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி

Summary

President, PM Modi and others pays tribute to Mahatma Gandhi at Rajghat Gandhi Jayanti

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.