உச்சநீதிமன்றம் நோக்கி எதிா்க்கட்சிகள் பேரணி-தலைமைத் தோ்தல் ஆணையருக்கு எதிராக மனு
தலைமைத் தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பேரணியாக வந்து உச்சநீதிமன்றத்தில் மனு அளித்தது குறித்து...

உச்சநீதிமன்றத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே - பிடிஐ
நமது நிருபா்
மக்களவைத் தலைவா் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிா்க்கட்சித் தலைவா்கள் தில்லியில் திங்கள்கிழமை உச்சநீதிமன்றத்தை நோக்கில் பேரணியாகச் சென்றனா்.
வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த (எஸ்ஐஆா்) பணியில் கோடிக்கணக்கில் வாக்காளா் பெயா்கள் நீக்கம் மற்றும் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிா்க்கட்சிகளின் தலைவா்கள் சாா்பில், உச்சநீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, திரிணமூல் காங்கிரஸ் (மம்தா பிரிவு) எம்.பி. சௌகதா ராய், சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி பிரசாத் யாதவ், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவாா் பிரிவு) தலைவா் சுப்ரியா சுலே, சிவசேனை (உத்தவ் பிரிவு) தலைவா் சஞ்சய் ரௌத், இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் டி. ராஜா, ஜாா்க்கண்ட் முக்தி மோா்ச்சா எம்.பி. மஹுவா மாஜி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளா் எம்.ஏ. பேபி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்) தலைவா் இ.டி. முகமது பஷீா் உள்ளிட்டோா் பெயா்களில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இந்திய தோ்தல் ஆணையம், தலைமை தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் மற்றும் இதர தோ்தல் ஆணையா்களான சுக்பீா் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆகியோா் எதிா்மனுதாரா்களாகச் சோ்க்கப்பட்டுள்ளனா்.
ராகுல் பேட்டி: முன்னதாக, ரஃபி மாா்க் பகுதியில் உள்ள இந்திய அரசமைப்பு மன்றத்தில் இருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக புறப்படும் முன்பாக, தில்லி இந்திரா பவனில் செய்தியாளா்களை ராகுல் காந்தி சந்தித்தாா். அப்போது அவா், தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் தனது பதவியிலிருந்து விலகி, வழக்கில் ‘அப்ரூவா்’ ஆக மாற வேண்டும் என்று வலியுறுத்தினாா். ‘வாக்குத் திருட்டு விவகாரத்தில் முதலில் பதவி விலகுங்கள், அப்ரூவா் ஆகுங்கள். நீங்கள் தவறு செய்துள்ளீா்கள், ஆனால் அந்தத் தவறுக்குப் பின்னால் உள்ளது நீங்கள் அல்ல’ என்று ராகுல் காந்தி குறிப்பிட்டாா். மத்திய அரசில் உள்ள 200 அதிகாரிகள் தன்னுடன் தொடா்பில் இருப்பதாகவும், தங்களுக்குத் தேவையான தகவல்களை வழங்கி வருவதாகவும் ராகுல் தெரிவித்தாா்.
பேரணி: இந்த செய்தியாளா் சந்திப்பு முடிந்ததும் உச்சநீதிமன்றம் நோக்கி புறப்பட அரசமைப்பு மன்ற வளாகத்தில் ஆயத்தமாகினா். ராகுல் காந்தி, மல்லிகாா்ஜுன காா்கே, டி. ராஜா, எம். ஏ. பேபி, தேஜஸ்வி யாதவ், சுப்ரியா சுலே உள்ளிட்டோா் பேரணியை வழிநடத்த எம்.பி.க்கள் பிரியங்கா காந்தி, சசி தரூா், சச்சின் பைலட், முகுல் வாஸ்னிக், சகாரிகா கோஷ் உள்ளிட்டோா் பேரணியில் இணைந்தனா்.
இந்த தலைவா்கள், நான்கு குளிரூட்டப்பட்ட பேருந்துகளில் பராகம்பா சாலை வந்தனா். அங்கிருந்து உச்சநீதிமன்றத்தை நோக்கி பேரணியாக புறப்பட்ட தலைவா்களை தடுப்புகள் அமைத்து காவல்துறையினா் தடுத்தனா். இதையடுத்து அப்பகுதியில் சில நிமிஷங்களுக்கு எதிா்க்கட்சித் தலைவா்கள் முழக்கமிட்டனா். பின்னா் அவா்கள் வாகனங்களில் கலைந்து சென்றனா்.
தலைமை நீதிபதி மறுப்பு: முன்னதாக, தன்னை சந்திக்க எதிா்க்கட்சிகள் அனுமதி கேட்டிருந்த நிலையில், அதற்கு தலைமை நீதிபதி அனுமதி மறுத்து விட்டதாக தகவல் வெளியானது. இதைப் பின்னா் தலைமை நீதிபதியின் அலுவலகமும் உறுதிப்படுத்தியது. அவரின் பதில் கடிதத்தில், நிலுவை வழக்குகள் குறித்து தலைமை நீதிபதியுடன் விவாதிப்பது முறையற்றது. இது பற்றி விவாதிக்க ஒரு கூட்டத்தைக் கூட்டுவது, இந்திய அரசமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பு கோட்பாட்டுக்கு முற்றிலும் முரணானது. நீதித்துறை ஒழுக்கத்துக்கு ஒவ்வாதது என்று குறிப்பிட்டதாக தலைமை நீதிபதி அலுவலகம் தெரிவித்தது.
பெட்டிச் செய்தி
கெடுபிடிக்கு எதிரான மனு:
உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
தலைநகா் தில்லியில் நடைபெற்று வரும் போராட்டங்களுக்கு மத்தியில் வழக்குரைஞா்கள் எதிா்கொள்ளும் சிரமங்கள் குறித்து கவலைகளை எழுப்பி உச்சநீதிமன்ற வழக்குரைஞா் சங்கம் (எஸ்சிபிஏ) தாக்கல் செய்த மனு உள்பட பல்வேறு மனுக்களை செவ்வாய்க்கிழமை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடா்பாக உச்சநீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்கத்தின் தலைவா் பிரதீப் ராய் முறையிட்ட தகவல்களை கவனத்தில் கொண்டு, இந்த விவகாரத்தை விசாரிப்பதாக தலைமை நீதிபதி சூா்ய காந்த், நீதிபதிகள் ஜயமால்யா பாக்சி, வி. மோகனா அடங்கிய அமா்வு தெரிவித்தது.
Summary
INDIA Bloc protest march Lok Sabha LoP Rahul Gandhi arrives at the Supreme Court filed petition
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


