ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் கைது!வணிக சிலிண்டர் விலை உயர்வு!இந்தியா கூட்டணியின் பேரணி மாபெரும் வெற்றி பெற வேண்டும்: டி.கே. சிவகுமார்தமிழ்நிலம் காத்த தியாகிகளுக்குத் தலைவணங்கி நன்றி செலுத்துவோம்! - மு.க. ஸ்டாலின்நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்கும் தமிழர்கள்: தமிழ்நாடு நாளில் பிரதமர் மோடி வாழ்த்து!மாநிலத்தின் பெருமைகளை நிலைநிறுத்திட உறுதியேற்போம்: தமிழ்நாடு நாளில் முதல்வர் விஜய் வாழ்த்து!

நாட்டின் வளர்ச்சிக்கான பங்களிப்பை வழங்கும் தமிழர்கள்: தமிழ்நாடு நாளில் பிரதமர் மோடி வாழ்த்து!

தமிழ்நாடு நாளில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருப்பது குறித்து...

பிரதமர் நரேந்திர மோடி. - கோப்புப்படம்

Updated On :

தமிழ்நாடு நாளான இன்று (நவ. 1) பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

திமுக ஆட்சியில் ஜூலை 28 ஆம் தேதி தமிழ்நாடு நாளாகக் கொண்டாடப்பட்டு வந்த நிலையில், மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட நாளான நவம்பா் 1-ஆம் தேதியை தமிழ்நாடு நாளாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அண்மையில் அறிவித்திருந்தது.

அதன்படி, தமிழ்நாடு நாளான இன்று பல்வேறு தலைவர்கள் தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் இந்த சிறப்பான தமிழ்நாடு நாளில் மனம் நிறைந்த நல்வாழ்த்துகள்! தொழில்முனைவோடு கடின உழைப்பும் மிக்கவர்களாய் விளங்கும் தமிழ்நாட்டு மக்கள் இந்தியாவின் வளர்ச்சிக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

உற்பத்தித் துறை முதல் வாகனங்கள் மற்றும் ஜவுளித்துறை, மின்னணுவியல், விண்வெளி தொழில்நுட்பம், மருத்துவம் மற்றும் வளர்ந்துவரும் தொழில்துறைகள் வரை, தமிழகம் தனித்துவமிக்க கண்டுபிடிப்பு, திறன் மற்றும் தொழில்துறை சிறப்புகளை தன்னகத்தே கொண்டு சிறந்து விளங்குகிறது.

தமிழ்நாட்டு மக்கள் தங்கள் பண்பாடு, தனித்துவம் மற்றும் பாரம்பரியம் குறித்து பெருமிதம் கொள்கின்றனர். தமிழ் கலாச்சாரம் நம் நாட்டின் நாகரிகப் பயணத்தைப் பல வழிகளில் செழுமையாக்கியுள்ளது.

இந்த நன்னாள் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் இன்றும் வரும் காலங்களிலும் மகிழ்ச்சியையும், வெற்றியையும், புதிய வாய்ப்புகளையும் வாரி வழங்கட்டும் என்று தெரிவித்தர்.

Summary

Prime Minister Narendra Modi has extended his greetings today (Nov 1) on the occasion of Tamil Nadu Day.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.