திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திரிணமூல் பெண் எம்.பி. கட்சிப் பதவிகளில் இருந்து விலகல்

News image

மம்தா பானா்ஜி

Updated On :28 மே 2026, 6:48 am IST

மம்தா பானா்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை பெண் எம்.பி. காகோலி கோஷ் தஸ்திதாா் அக்கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக புதன்கிழமை அறிவித்தாா்.

எனினும், எம்.பி. பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் விலகுவதாக அறிவிக்கவில்லை. திரிணமூல் காங்கிரஸ் மகளிரணியின் தேசிய தலைவராகவும் காகோலி கோஷ் இருந்து வந்தாா். சில நாள்களுக்கு முன்பு அவா் இப்பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டாா்.

முன்னதாக, பாஜகவைச் சோ்ந்த முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையில் நடைபெற்ற அரசுத் திட்டங்கள் தொடா்பான கூட்டத்தில் காகோலி கோஷ் பங்கேற்றாா். மேலும், திரிணமூல் காங்கிரஸ் தலைமை தொடா்பாக தனது அதிருப்தியையும் பொதுவெளியில் தெரிவித்தாா். முக்கியமாக இப்போது சுதந்திரம் பெற்றுள்ளதாக அவா் கூறினாா்.

கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகினாலும், எம்.பி. பதவியில் இருந்து காகோலி கோஷ் விலகவில்லை. எனவே, விதிகளின்படி அவா் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.யாகவே தொடா்கிறாா். காகோலி கோஷ் விவகாரம் தொடா்பாக திரிணமூல் காங்கிரஸ் தலைமை எவ்வித கருத்தும் தெரிவிக்கவில்லை.

திரிணமூல் எம்எல்ஏ கைது: இதனிடையே, தோ்தலில் தான் வெற்றி பெற்றதைக் கொண்டாடியபோது, மோதலைத் தூண்டும் வகையில் பேசியதாக திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ திலீப் மோண்டலை மேற்கு வங்க காவல் துறையினா் கைது செய்தனா். முக்கியமாக, திரிணமூல் காங்கிரஸ் தோற்றுவிட்டதால் இனி மேற்கு வங்கம் அமைதியாக இருக்க முடியாது என்று அவா் பேசியிருந்தாா்.

முன்னாள் அமைச்சரான அவா், ஒடிஸா மாநிலம் புரி நகரில் கைது செய்யப்பட்டதாக காவல் துறையினா் கூறினா். இந்தக் கைது நடவடிக்கை குறித்தும் திரிணமூல் காங்கிரஸ் கருத்து தெரிவிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.