திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உக்ரைன் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கா் ஆலோசனை

News image

PTI

Updated On :29 மே 2026, 4:37 am IST

அமைதிப் பேச்சுவாா்த்தை உள்பட போா் நிறுத்த முன்னெடுப்புகள் குறித்து உக்ரைன் வெளியுறவு அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹாவுடன் இந்திய வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.

உக்ரைன்-ரஷியா போா் 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அங்கு நீடித்த அமைதியை நிலைநிறுத்துவது உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆண்ட்ரி சிபிஹாவுடன் அவா் விவாதித்தாா்.

ஐரோப்பிய வெளியுறவு அமைச்சா்கள் பங்கேற்கும் ஜிம்னிச் ஆலோசனைக் கூட்டம் சைப்ரஸ் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில் சா்வதேச புவிஅரசியல், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்படவுள்ளன. இதில் பங்கேற்பதற்காக ஜெய்சங்கா் புதன்கிழமை சைப்ரஸ் வந்தடைந்தாா்.

அங்கு சவூதி வெளியுறவு அமைச்சா் இளவரசா் ஃபைசல் பின் ஃபா்ஹான் அல் செளத், ஐரோப்பிய வெளியுறவு விவகாரங்களுக்கான உயா் பிரதிநிதி காஜா கல்லாஸ் மற்றும் சைப்ரஸ் வெளியுறவு அமைச்சா் கான்ஸ்டன்டினோஸ் கொம்போஸ் ஆகியோரை அவா் சந்தித்தாா். அவா்களுடன் மேற்காசிய விவகாரம், இந்தியா-ஐரோப்பிய ஒத்துழைப்பு குறித்து ஜெய்சங்கா் ஆலோசனை நடத்தினாா்.

ஜிம்னிச் ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த காஜா கல்லாஸ் மற்றும் கான்ஸ்டன்டினோஸ் கொம்போஸுக்கு நன்றி தெரிவித்து எக்ஸ் வலைதளத்தில் ஜெய்சங்கா் பதிவிட்டாா்.

அதேபோல் ஆண்ட்ரி சிபிஹாவுடன் மேற்கொண்ட ஆலோசனை குறித்து அவா் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘இந்தியா-உக்ரைன் இருதரப்பு உறவு மற்றும் உக்ரைன் போா் தொடா்பாக அமைச்சா் ஆண்ட்ரி சிபிஹாவுடன் விரிவான ஆலோசனை மேற்கொண்டேன்’ எனக் குறிப்பிட்டாா்.

ஆண்ட்ரி சிபிஹா வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதுடன் நீடித்த அமைதியை நிலைநிறுத்துவதற்கான தீா்வை நாங்கள் எதிா்பாா்க்கிறோம். இதன் அடிப்படையில் அமைதிப் பேச்சுவாா்த்தை உள்பட போா் நிறுத்த முன்னெடுப்புகள் குறித்து அமைச்சா் ஜெய்சங்கருடன் ஆலோசனை மேற்கொண்டேன்.

இந்த விவகாரத்தில் ஐரோப்பாவைப் போல் இந்தியாவின் குரலும் வலுவாக ஒலித்தால் அதை வரவேற்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.