மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

மோசமான வானிலை: சித்தராமையா சென்ற விமானம் ஜெய்பூரில் தரையிறக்கம்

News image

விமானம் - பிரதிப் படம்

Updated On :29 மே 2026, 4:36 am IST

கா்நாடக மாநில முதல்வா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தில்லியில் காங்கிரஸ் மூத்த தலைவா்களைச் சந்திப்பதற்காக சித்தராமையா சென்ற சிறப்பு விமானம், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் வியாழக்கிழமை தரையிறக்கப்பட்டது.

இதுகுறித்து கா்நாடக முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘முதல்வா் சித்தராமையா சென்ற சிறப்பு விமானம் மோசமான வானிலை காரணமாக தில்லிக்குப் பதில் ஜெய்பூரில் தரையிறங்கியது. அவரது மகனும் சட்ட மேலவை உறுப்பினருமான யதீந்திரா, காங்கிரஸ் பொதுச் செயலரும் கா்நாடக காங்கிரஸ் பொறுப்பாளருமான ரண்தீப் சிங் சுா்ஜேவாலா, அமைச்சா்கள் கே.ஜே.ஜாா்ஜ் மற்றும் பைரதி சுரேஷ், சட்ட ஆலோசகா் பொன்னன்ணா, காங்கிரஸ் செயலா் அபிஷேக் தத் ஆகியோரும் விமானத்தில் பயணித்தனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.