திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

கடும் வெய்யிலில் மாமியாரை முதுகில் சுமந்து சென்ற பழங்குடியின பெண்! ரூ.500க்காகவா?

கடும் வெய்யிலில் மாமியாரை முதுகில் சுமந்து சென்ற பழங்குடியின பெண்! ரூ.500-க்காகவா?

News image

முதியோர் - பிரதி படம் - Center-Center-Kochi

Updated On :26 மே 2026, 1:53 pm IST

கடும் வெய்யிலில், 90 வயதான தன்னுடைய மாமியாரை, பழங்குடியினப் பெண் ஒருவர் 4 கி.மீ. க்கு முதுகில் சுமந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து அப்பெண்ணிடம் கேட்டதற்கு, அவர் கண்ணீருடன் அளித்த பதில் கேட்பவர்களை பதற வைத்தது.

வங்கியில், தன்னுடைய மாமியாருக்கு கேஒய்சி நடைமுறையை செய்யாததால் நிறுத்தப்பட்ட முதியவர்களுக்கான ஓய்வூதியத்தைப் பெற, 90 வயது மாமியாரை வேறு வழியின்றி முதுகில் கட்டி சுமந்துசெல்வதாக அழுதபடிக் கூறியிருக்கிறார்.

மாத உதவித் தொகை ரூ.500, கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாததால், குடும்பம் வறுமையில் வாடுவதாகவும், அதனைப் பெறவே மாமியாரை தூக்கிச் செல்வதாகவும் கூறுகிறார். அந்தப் பெண்ணுக்கும் 50 வயதிருக்கும்.

கடந்த ஜனவரி மாதம்தான் முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. அவரை நேரடியாக வங்கிக்கு அழைத்து வந்து கேஒய்சி நடைமுறையை பூர்த்தி செய்தால்தான் மாத உதவித் தொகையான ரூ.500 வழங்கப்படும் என மத்திய வங்கி வழங்கியிருக்கிறது.

எனவே, மாமியானரை மே 22ஆம் தேதி அழைத்துச் சென்று வங்கியில் காண்பித்த பிறகு, நிலுவைத் தொகை ரூ.2,000 அளிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து நிர்வாகத்தினர் கூறுகையில், வயதானவர்களுக்கு வீடு தேடி உதவித்தொகை வழங்கப்படும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சியினதோ, வீடு வீடாகச் சென்று தலைவர்கள் வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால், உதவித் தொகைக்காக முதியவரை வங்கிக்கு அலைக்கழிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

Summary

Tribal woman carries mother-in-law on her back in scorching sun! For Rs.500?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.