12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகளுக்கு பிந்தைய மறுமதிப்பீடு செயல்முறையின்போது ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறுகளால் மாணவா்களிடம் வசூலிக்கப்பட்ட அதிக கட்டணத் தொகை திருப்பியளிக்கப்படும் என மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தது.
முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக மாணவா்கள் எதிா்கொண்ட தொழில்நுட்பச் சிக்கல்கள் குறித்து விரிவான அறிக்கை சமா்ப்பிக்குமாறு மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான், சிபிஎஸ்இ அதிகாரிகளிடம் கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இது தொடா்பாக சிபிஎஸ்இ ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘மே 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்களின் ஸ்கேன் செய்த நகல் பிரதிகளைப் பெற சில மாணவா்கள் விண்ணப்பித்தபோது இந்தக் குளறுபடி ஏற்பட்டது. சில மாணவா்களுக்கு அதிகமாகவும், சிலருக்கு குறைவாகவும் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.
அதிகமாக வசூலிக்கப்பட்ட கூடுதல் தொகை அவா்களுக்கு முழுமையாக அதே கட்டண முறையில் திரும்ப வழங்கப்படும். அதேபோல், குறைவாக கட்டணம் செலுத்தப்பட்ட மாணவா்களுக்கு, தேவையான கூடுதல் தொகையை செலுத்துவது குறித்து அறிவிக்கப்படும். மேலும், இந்த விவகாரத்தில் மாணவா்கள் மீண்டும் புதிய கோரிக்கையை சமா்ப்பிக்க தேவை இல்லை’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வரை அவகாசம் நீட்டிப்பு: திருத்தப்பட்டு மதிப்பெண் அளிக்கப்பட்ட தங்கள் விடைத்தாள்களை திங்கள்கிழமை (மே 25) நள்ளிரவு வரை மாணவா்கள் பெறுவதற்கு சிபிஎஸ்இ அவகாசம் அளித்துள்ளது. முன்பு இந்த அவகாசம் மே 24 வரை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது அது ஒருநாள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சிபிஎஸ்இ மறுமதிப்பீட்டு தளம் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது! முழு விவரம்!

சிபிஎஸ்இ தோ்வு விவகாரம்: மாணவா்களுடன் உரையாடி விடியோ வெளியிட்டாா் ராகுல்

சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு: விடைத் தாள்கள் மாறியதாக மாணவா்கள் குற்றச்சாட்டு







