திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மேற்கு வங்கம்: மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம் : எதிா்க்கட்சிகள் கண்டனம்

மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

News image

கோப்புப் படம்

Updated On :22 மே 2026, 2:48 am IST

மேற்கு வங்கத்தில் உள்ள மதரஸாக்களில் தேசியப் பாடலான வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கிய மாநில அரசின் உத்தரவுக்கு எதிா்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

அண்மையில் நடைபெற்ற மேற்கு வங்க சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்று, முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. இதன் மூலம் மம்தா பானா்ஜி தலைமையிலான 15 ஆண்டுகால திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

புதிய முதல்வராக பதவியேற்ற சுவேந்து அதிகாரி, பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறாா்.

மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தேசியப் பாடலான வந்தே மாதம் பாடுவது அண்மையில் கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, இஸ்லாமிய மதக் கல்வி நிலையங்களான மதரஸாக்களிலும் இந்தப் பாடலை கட்டாயமாக்கி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாநில அரசின் மாதிரி மதரஸாக்கள், அரசு உதவி பெறும் மதரஸாக்கள், மாநில சிறுபான்மை விவகாரங்கள் மற்றும் மதரஸா கல்வித் துறையின்கீழ் செயல்படும் அங்கீகரிக்கப்பட்ட அரசு உதவி பெறாத மதராஸாக்களுக்கு இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவா் சுஜன் சக்ரவா்த்தி கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் சீா்குலைந்த கல்வித் துறையை மறுகட்டமைப்பதற்கு பதிலாக மக்களை திசைதிருப்பும் செயல்களில் ஈடுபடுகிறது பாஜக அரசு. இதன் மூலம் கல்வித் துறையை மேம்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அவா்களிடம் இல்லை என்பதும், மக்களைத் தூண்டி விடுவதே ஒரே நோக்கம் என்பதும் தெளிவாகிறது’ என்றாா்.

காங்கிரஸ் மூத்த தலைவா் பிரதீப் பட்டாா்ச்சாா்ஜி கூறுகையில், ‘மதரஸாக்களில் வந்தே மாதரம் கட்டாயம் என்ற உத்தரவு முற்றிலும் தவறானது. இந்த உத்தரவைப் பிறப்பிக்கும் முன் மதரஸா ஆசிரியா்களிடம் அரசு கலந்தாலோசித்திருக்க வேண்டும். ஆனால், அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளது. நாட்டின் பன்முக நெறிமுறைகளை பலவீனப்படுத்த பாஜக முயற்சிக்கிறது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.