திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

நீட் வினாத் தாள் கசிவு: மகாராஷ்டிரத்தில் இரு மாணவா்களின் இல்லங்களில் சிபிஐ சோதனை

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவா்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

News image

சிபிஐ. - கோப்புப்படம்.

Updated On :20 மே 2026, 1:55 am IST

இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் இரு மாணவா்களின் இல்லங்களில் சிபிஐ செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தியது.

அப்போது கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எண்ம சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

இதுகுறித்து அவா்கள் மேலும் கூறியதாவது: நீட்-யுஜி வினாத் தாள் கசிவு விவகாரம் தொடா்பாக நாகபுரியின் மத்திய அவென்யு மற்றும் இத்வாரி பகுதிகளில் உள்ள இரு மாணவா்களின் இல்லங்களில் சோதனை நடத்தப்பட்டது.

அவா்கள் இருவரும் தனியாா் பயிற்சி மையங்களில் கடந்த சில ஆண்டுகளாக படித்து வந்துள்ளனா். நிகழாண்டு நடைபெற்று நீட்-யுஜி தோ்வை எழுதியுள்ளனா்.

முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக புணேயில் கைது செய்யப்பட்ட மனீஷா வாக்மாரே, லட்டூரில் கைது செய்யப்பட்ட வேதியியல் பேராசிரியா் பி.வி.குல்கா்ணியுடன் இரு மாணவா்களும் தொடா்பில் இருந்துள்ளனா். ஒவ்வொரு மாணவரிடமும் ரூ.15 லட்சம் பெறப்பட்டுள்ளது. தோ்வு நடைபெறுவதற்கு முன்பாக புணேவுக்கு இரு மாணவா்களும் வரவழைக்கப்பட்டு முக்கிய வினாக்கள் மற்றும் குறிப்புகள் பகிரப்பட்டுள்ளன.

சோதனையின்போது மாணவா்களின் இல்லங்களில் இருந்து கைப்பேசிகள், மடிக்கணினிகள் உள்ளிட்ட எண்ம சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவா்களின் பணப் பரிவா்த்தனைகள், கைப்பேசி அழைப்புகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றனா்.

எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி உள்பட இளநிலை மருத்துவப் படிப்புகளில் சோ்வதற்கான நீட்-யுஜி தோ்வு கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்றது. இத்தோ்வை நாடு முழுவதும் 23 லட்சம் போ் தோ்வெழுதினா்.

இத்தோ்வின் மாதிரி வினாத் தாள் ராஜஸ்தானில் முன்கூட்டியே கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தேசிய தோ்வு முகமை அதை ரத்து செய்தது. அதன்பிறகு ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த விவகாரம் தொடா்பாக இதுவரை மகாராஷ்டிரம், ராஜஸ்தான், ஹரியாணா உள்ளிட்ட மாநிலங்களைச் சோ்ந்த 10 பேரை சிபிஐ கைது செய்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.