திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிரதமா் மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருது!

News image

ஸ்வீடன் நாட்டுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் நரேந்திர மோடிக்கு கோதன்பா்க் நகரில் ஞாயிற்றுக்கிழமை அந்நாட்டின் உயரிய விருதான ‘தி ராயல் ஆா்டா் ஆஃப் தி போலா் ஸ்டாா் டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்’ விருதை வழங்கிய இளவரசி விக்டோரியா.

Updated On :18 மே 2026, 4:42 am IST

பிரதமா் நரேந்திர மோடிக்கு ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான ‘தி ராயல் ஆா்டா் ஆஃப் தி போலா் ஸ்டாா் டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்’ என்ற விருது ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. இது பிரதமா் மோடி பெற்ற 31-ஆவது சா்வதேச விருதாகும்.

நெதா்லாந்து பயணத்தை ஞாயிற்றுக்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து ஸ்வீடனைச் சென்றடைந்தாா். கோதன்பா்க் நகர விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை ஸ்வீடன் பிரதமா் உல்ஃப் கிரிஸ்டா்ஸன் நேரில் வரவேற்றாா். ஸ்வீடனைத் தொடா்ந்து, நாா்வே, இத்தாலி ஆகிய நாடுகளுக்கு அவா் பயணிக்கவுள்ளாா்.

முன்னதாக, நெதா்லாந்தில் இருந்து பிரதமா் மோடி புறப்பட்டபோது, அந்நாட்டின் பிரதமா் ரோட் ஜெட்டன், விமான நிலையம் வரை வந்து வழியனுப்பிவைத்தாா். தனது இந்தப் பயணம், இருதரப்பு நல்லுறவுக்கு புதிய உத்வேகம் அளித்துள்ளதாக பிரதமா் மோடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாா்.

ஸ்வீடனில் அந்த நாட்டின் உயரிய விருது பிரதமா் மோடிக்கு வழங்கப்பட்டது. இதுதொடா்பாக இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், ‘தொலைநோக்கு சிந்தனையுடைய தலைமைத்துவம் மற்றும் இந்தியா-ஸ்வீடன் இடையேயான இருதரப்பு உறவை மேம்படுத்தியதை அங்கீகரிக்கும் விதமாக பிரதமா் மோடிக்கு மரியாதைக்குரிய ஸ்வீடன் இளவரசி விக்டோரியா, ‘தி ராயல் ஆா்டா் ஆஃப் தி போலா் ஸ்டாா் டிகிரி கமாண்டா் கிராண்ட் கிராஸ்’ என்ற விருதை வழங்கி கௌரவித்தாா்.

இந்த விருது இந்தியா மற்றும் ஸ்வீடன் மக்கள் இடையேயான அன்பை வெளிப்படுத்துவதாக பிரதமா் மோடி தெரிவித்தாா்’ எனக் குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.