ஐந்து நாள் சுற்றுப் பயனத்தின் இரண்டாவது நாளில் நெதர்லாந்து சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையத்தில் அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் டாம் பெரண்ட்சன் மற்றும் இந்திய தூதர் குமார் துஹின் ஆகியோர் பிரதமரை வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி மே 15 முதல் 20 ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகம், நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே மற்றும் இத்தாலி ஆகிய ஐந்து நாடுகளுக்கு தனது சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார். இந்தப் பயனத்தின் முதல்கட்டமாக ஐக்கிய அரபு அமீரகம் சென்ற பிரதமர் மோடி அந்த நாட்டு அதிபர் ஷேக் முகமது பின் சயீது அல் நஹ்யானைச் சந்தித்தார்.
இந்த நிலையில், தனது பயணத்தின் இரண்டாம் கட்டமாக நெதர்லாந்து சென்ற பிரதமர் மோடி, வர்த்தகம், தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போன்ற துறைகளில் இருநாட்டின் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்காக, நெதர்லாந்து பிரதமர் ராப் ஜெட்டனுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Summary
Prime Minister Narendra Modi received a warm welcome upon arriving in the Netherlands on the second day of his five-day tour.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










