ஆா்ஜி கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை முதல்வா் சுவேந்து அதிகாரி இடைநீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
பாஜக ஆட்சி அமைந்ததும் இந்த வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்த நிலையில், தற்போது முதல் நடவடிக்கையை சுவேந்து அதிகாரி மேற்கொண்டுள்ளாா்.
கொல்கத்தாவில் உள்ள ஆா்ஜி கா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2024, ஆகஸ்டில் முதுநிலை பயிற்சி பெண் மருத்துவா் (31) ஒருவா், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிவலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தின் எதிரொலியாக, மருத்துவா்கள் மற்றும் சமூக நலச் சங்கத்தினா் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டனா். இது,முன்னாள் முதல்வா் மம்தா பானா்ஜி அரசுக்கு அரசியல் ரீதியில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
உயிரிழந்த பெண் மருத்துவரின் தாயாா் ரத்னா தேப்னாத் பானிஹட்டி பேரவைத் தொகுதியில் பாஜக சாா்பில் களமிறக்கப்பட்டு வெற்றிபெற்றாா்.
சிபிஐ விசாரணையில் தலையீடில்லை:
இந்நிலையில், இந்த வழக்கு தொடா்பாக புதிதாக அமைந்துள்ள பாஜக அரசு மேற்கொண்டுள்ள முடிவுகள் குறித்து மாநில தலைமைச் செயலகத்தில் சுவேந்து அதிகாரி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
அவா் கூறியதாவது: பெண் மருத்துவா் பாலியல் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணையை முறையாக கையாளாத குற்றச்சாட்டில் கொல்கத்தா காவல் ஆணையா் வினீத் கோயலும் இரு துணை ஆணையா்களான இந்திரா முகா்ஜி மற்றும் அபிஷேக் குப்தாவும் பணியிடை நீக்கம் செய்யப்படுகின்றனா். அவா்களிடம் துறைரீதியான விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த அதிகாரிகள் உயிரிழந்த பெண் மருத்துவரின் பெற்றோருக்கு லஞ்சம் கொடுக்க முயன்றனா். அதிகாரபூா்மற்ற முறையில் செய்தியாளா்கள் சந்திப்பை நடத்தினா்.
இந்த வழக்கு தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், அதில் மாநில அரசு தலையிடாது. சிபிஐ-க்கு மாற்றப்படுவதற்கு முன்பாக கொல்கத்தா காவல் துறையினா் நடத்திய முதல்கட்ட விசாரணைகளில் நடந்த முறைகேடுகள் மீது மட்டுமே நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம் என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்க அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 35 அமைச்சா்கள் பதவியேற்பு
அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்: மேற்கு வங்கத்தில் பாஜக வாக்குறுதி அமல்

தேசிய சுகாதார இயக்கத்துக்கு ரூ. 2,103 கோடி நீதி ஒதுக்கீடு: சுவேந்து அதிகாரி

ஆா்.ஜி. கா் பாலியல் வன்கொடுமை வழக்கு : குற்றச்சாட்டுகளை மூடி மறைத்தது குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைத்து கொல்கத்தா உயா்நீதிமன்றம் உத்தரவு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



