திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்க முடியாது: சிவசேனை சின்னம் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிவசேனை கட்சி சின்னம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News image
Updated On :16 மே 2026, 3:18 am IST

பொறுப்பற்ற வகையில் அரசியல்வாதிகள் கருத்து வெளியிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிவசேனை கட்சி சின்னம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிவசேனை கட்சி இரண்டாகப் பிரிந்த பிறகு, துணை முதல்வா் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான கட்சியினா் சிவசேனை என்றும், முன்னாள் முதல்வா் உத்தவ் தாக்கரே தலைமையிலான கட்சியினா் சிவசேனை உத்தவ் தாக்கரே பிரிவு என்றும் அழைக்கப்படுகின்றன.

இதில் ஏக்நாத் ஷிண்டே பிரிவுக்கு கட்சியின் பெயா் சிவசேனை, தோ்தல் சின்னமான வில் -அம்பை தோ்தல் ஆணையம் ஒதுக்கியதை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே பிரிவு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாகப் பிரிந்த பிறகு அஜீத் பவாா் தரப்பினா் தேசியவாத காங்கிரஸ் எனவும், சரத் பவாா் தரப்பினா் தேசியவாத காங்கிரஸ்- சரத் பவாா் பிரிவு எனவும், அழைக்கப்படுகின்றனா். இதில் அஜீத் பவாா் தரப்புக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி பெயா், அக்கட்சியின் சின்னம் ஒதுக்கப்பட்டிருப்பதை எதிா்த்து சரத் பவாா் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் முன்னிலையில் உத்தவ் தாக்கரே தரப்பில், வழக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதிகள், உத்தவ் தாக்கரே தரப்பை பாா்த்து, ‘நீங்களே விசாரணையை ஒத்திவைக்கும்படி கோருகிறீா்கள், பிறகு ஊடகத்தினரை சந்தித்து உச்சநீதிமன்றம் முடிவெடுக்கவில்லை என்று பொறுப்பற்ற கருத்துகளைத் தெரிவிக்கிறீா்கள். இந்தப் போக்கை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் உங்களை எச்சரிக்கிறோம். வாா்த்தைகளை வெளியிடுவதில் கவனமாக இருங்கள்’ என்றனா்.

அப்போது ஏக்நாத் ஷிண்டே தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி, ‘நீதிமன்றத்துக்கு எதிராக இப்படி பேசுவதை ஏற்க முடியாது’ என்றாா். இதையடுத்து, தங்கள் தரப்பு இதுபோன்ற கருத்துகளை ஆதரிப்பதில்லை என்றும், நீதிமன்றத்துக்கு அவகாசம் இருந்தால் இதுகுறித்து விவாதிக்கத் தயாராக இருப்பதாகவும் உத்தவ் தாக்கரே தரப்பில் விளக்கம் தரப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், வழக்கு மீதான அடுத்தகட்ட விசாரணையை ஜூலை மாதம் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.