கேரளத்தின் புதிய முதல்வர் குறித்த அறிவிப்பு இன்று வெளியாக வாய்ப்பிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் ஆட்சியமைக்கவிருக்கிறது.
இருப்பினும், தேர்தல் முடிவுகள் வெளியாகி 9 நாள்களாகியும், புதிய முதல்வர் குறித்த அறிவிப்பை காங்கிரஸ் இன்னும் வெளியிடவில்லை. முதல்வர் தேர்வில் தொடர்ந்து நீடிக்கும் குழப்பத்தால் மாநிலத்தில் காங்கிரஸுக்கு எதிராக அக்கட்சியினரே விமர்சன வாசகங்களை ஒட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளத்தின் புதிய முதல்வர் குறித்து அறிவிப்பு இன்று வெளியாகும் என கட்சியின் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமையில் கூறினார். இதன்படி, புதிய முதல்வர் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, முதல்வர் குறித்த அறிவிப்பு புதன்கிழமையிலேயே அறிவிக்கப்பட இருந்ததாகவும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால், அறிவிப்பில் தாமதம் ஏற்படலாம் என்றும் மாநில காங்கிரஸ் தலைவர் சன்னி ஜோசப் கூறியிருந்தார்.
Summary
Keralam Chief Minister likely to be announced today
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

போட்டியால் திணறும் காங்கிரஸ்! கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிப்பு!
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!

கேரளத்தின் புதிய முதல்வர் யார்? மும்முனைப் போட்டியில் சிக்கிய காங்கிரஸ்!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!


