கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது நாளை அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
கேரளத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி 102 இடங்களைக் கைப்பற்றி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, முதல்வர் பதவிக்கு மூத்த தலைவர்கள் கே.சி. வேணுகோபால், சதீசன் மற்றும் ரமேஷ் சென்னிதாலா இடையே போட்டி நிலவி வருவதால் கேரளத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசு இதுவரை பெறுப்பேற்கவில்லை.
இந்த நிலையில், முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்ய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே முன்னிலையில் தில்லியில் இன்று (மே 13) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, கேரளத்தின் புதிய முதல்வர் யார் என்பது குறித்து நாளை (மே 14) அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் கூறியதாவது:
“கேரளத்தின் காங்கிரஸ் உறுப்பினர்களால் வழங்கப்பட்ட அதிகாரத்தின் அடிப்படையில், காங்கிரஸ் தலைமை அனைத்து ஆலோசனைகளையும் நிறைவு செய்துள்ளது. கேரளத்தின் அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்த முடிவு நாளை அறிவிக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள காங்கிரஸ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களில் பெரும்பாலானோர் கே.சி. வேணுகோபாலுக்கு ஆதரவளிப்பதாகக் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
Summary
The Congress party has stated that who the new Chief Minister of Kerala will be will be announced tomorrow.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? தொடரும் இழுபறி
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? இன்று அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!

கேரளத்தின் புதிய முதல்வர் யார்? மும்முனைப் போட்டியில் சிக்கிய காங்கிரஸ்!
விடியோக்கள்
#elnino | சூப்பர் எல் நினோ செய்யப்போகும் சம்பவங்கள்: டெல்டா வெதர்மேன் ஹேமச்சந்தர் Exclusive

Parimala and co movie review | ஒரு குடும்பமும் ஒரு கொலையும்! | Jayaram | Urvashi | Pandiraaj

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!




