தில்லியில் அரசு ஊழியர்களை வாரத்தில் இரண்டு நாள்களுக்கு மட்டும் வீட்டிலிருந்தே வேலை செய்யும்படி, அந்த மாநில முதல்வர் ரேகா குப்தா உத்தரவிட்டுள்ளார்.
தனியார் நிறுவனங்களிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் வெள்ளிக்கிழமை (மே 15) முதல் அமலுக்கு வருவதாகவும் இதன்மூலம் எரிபொருள் சேமிப்பு, போக்குவரத்து நெரிசலிலிருந்து விடுபடுதல் போன்ற திட்டங்களை நோக்கி நாம் நகரலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஆசிய போர்ச்சூழல் காரணமாக, கச்சா எண்ணெய் விலை உயர்வை எதிர்கொள்ள, பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறும் முடிந்தவரை, ஊழியர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறும் பிரதமர் நரேந்திர மோடி மக்களிடம் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தில்லி முதல்வர் ரேகா குப்தா அறிமுகப்படுத்தியுள்ள முக்கியத் திட்டங்கள்:
அரசு ஊழியர்கள் வாரத்தில் இரண்டு நாள்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டும்.
அரசு அதிகாரிகளின் வாகனங்களுக்கான பெட்ரோல், டீசலுக்கான செலவு 20 சதவிகிதம் குறைக்கப்படும்.
அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் ஒவ்வொரு திங்கள்கிழமையும் மெட்ரோ ரயிலை பயன்படுத்த வேண்டும்.
வாரத்தில் ஒரு நாள் வாகனமில்லா தினத்தை கடைப்பிடிக்க வேண்டுகோள்.
அரசுக்குப் பயன்படும் வாகனங்களைப் புதிதாக வாங்குவது ஆறுமாத காலம் நிறுத்தப்படுகிறது.
முடிந்தவரை, அரசு அதிகாரிகள் உள்பட அனைவரும் தங்களுடைய அன்றாடத் தேவைகளுக்கு பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.
வழக்கமான அலுவலகங்களுக்கு இடையேயான பயணத்தைக் குறைப்பதற்காக, 50 சதவிகித அலுவல் கூட்டங்களை இணையவழியில் நடத்த திட்டமிட வேண்டும்.
Summary
In Delhi, Chief Minister Rekha Gupta has ordered government employees to work from home for only two days a week.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











