ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது, இந்திய ராணுவ வீரர்களுக்கு 11 வயது சிறுவன் செய்த எளிய சேவை, நாட்டிற்கே உத்வேகம் அளித்தது.
சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு பாகிஸ்தானுடனான மோதல்களின்போது, பஞ்சாபின் ஃபெரோஸ்பூரில் உள்ள தரன்வாலி கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் ஷ்ரவன் சிங், இந்திய-பாகிஸ்தான் எல்லையில் உள்ள தனது கிராமத்தில் பணியிலிருந்த ராணுவ வீரர்களுக்குத் தனது வீட்டியிலிருந்து தேநீர், தண்ணீர், பால் மற்றும் லஸ்ஸி ஆகியவற்றைத் தானாக முன்வந்து நாள்தோறும் கொடுத்து உதவினார்.
ஆபரேஷன் சிந்தூரின் முதாலாமாண்டு நிறைவு நாளில், சிறுவன் ஷ்ரவனிடம் இதுதொடரபாக கேட்டபோது,
நம் நாட்டிற்காக பாடுபடும் ராணுவ வீரர்களுக்கு தன்னால் முடிந்த சேவையை செய்ய வேண்டும் என தன் மனதில் நினைத்தால், அவர்களுக்கு உணவு கொடுத்து உதவியதாக சிறுவன் கூறினான்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு எதிராக இந்திய ராணுவம், கடந்த மே மாதத்தில் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலின்போது, நாள்தோறும் ராணுவ வீரர்களுக்கு ஷ்ரவன் சிங் (10) உணவுப் பொருள்கள் கொடுத்து உதவினான்.
இதற்காக சிறுவன் கெரளவிக்கப்படுவேன் என்று ஒருபோதும் அவன் எதிர்பார்க்கவில்லை.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தை சோனா சிங் கூறியபோது,
தங்கள் மகன் பெற்றுள்ள இந்த அங்கீகாரத்தை நம்புவதற்குக் கடினமாக இருப்பதாகவும், என் மகனை ஊக்குவித்ததற்கும், அவனது பங்களிப்பை அங்கீகரித்தற்கும் இந்திய ராணுவத்திற்கு நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
சிறுவயதிலேயே எங்கள் மகன் இந்தியக் குடியரசுத் தலைவரிடமிருந்து விருது பெறுவான், பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என ஒருபோதும் கற்பனை செய்ததில்லை.
இன்று, எங்கள் மகன் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் பொது நிகழ்வுகளுக்கும் அழைக்கப்படுகிறான். அவன் தனது படிப்பில் கவனம் செலுத்துவதோடு, எதிர்காலத்தில் ஆயுதப் படைகளில் சேர வேண்டும் என்ற கனவிலும் இருக்கிறான் என்று அவர் கூறினார்.
ஆபரேஷன் சிந்தூரின்போது நிலவிய இந்திய-பாகிஸ்தான் பதட்டங்களைத் தொடர்ந்து டிரோன் தாக்குதல்கள், எல்லை தாண்டிய ஷெல் தாக்குதல்களின் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், சிறுவன் ஷவன் தனது கிராமத்தில் உள்ள ராணுவ முகாம்களுக்குத் தொடர்ந்து சென்று முன்னணிப் படையினருக்குச் சேவை செய்தான்.
சுட்டெரித்த வெய்யிலையும் பொருட்படுத்தாமல், படைவீரர்களுக்கு அந்த இளம் சிறுவன் ஆற்றிய சேவை, ராணுவ அதிகாரிகள் மற்றும் கிராம மக்களின் அனைவரின் பாராட்டையும் பெற்றது. சிறுவனின் தேசபக்தி உணர்வையும் தன்னலமற்ற அர்ப்பணிப்பையும் அங்கீகரிக்கும் விதமாகக் கடந்தாண்டு புது தில்லியில் நடைபெற்ற விழாவில் சிறுவன் ஷ்ரவனுக்கு பால புரஸ்கார் விருதைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கிக் கௌரவித்தார்.
ஒரு நாள் ராணுவ சீருடை அணிந்து பணியாற்றும் அவனது கனவிற்கு, நிதி நெருக்கடிகள் தடையாக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக ஷ்ரவனின் கல்விக்கு நிதியுதவி அளிக்க ராணுவம் முடிவு செய்தது.இதன் மூலம் ஷவனின் உத்வேகம் அளிக்கும் சேவையானது தேசிய அளவில் அங்கீகாரம் பெற்றது.
Summary
What began as an 11-year-old's simple gesture of service towards the Indian armed forces at a remote border village during Operation Sindoor, turned into a tale that inspired the nation.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆபரேஷன் சிந்தூர்: இந்தியாவின் உறுதிக்குத் தீர்க்கமான சான்று! குடியரசுத் தலைவர்
ஆபரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு: பிரதமர் பெருமிதம்

கொலை செய்யப்பட்ட சடலத்துடன் காட்டில் இருந்த சிறுவன்
சர்ச்சை இயக்குநர் இயக்கத்தில் திரைப்படமாகும் ஆபரேஷன் சிந்தூர்!
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



