பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்தார்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து 10 மாநிலங்களை உறுப்பினர்களில் ஏழு பேரான ராகவ் சத்தா, அசோக் மிட்டல், சந்தீப் பதக், ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம்ஜித் சாஹ்னி, சுவாதி மாலிவால் ஆகியோர் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தனர்.
ஆம் ஆத்மி கட்சி தனது கொள்கைகள், மதிப்பீடுகள் மற்றும் அடிப்படை அறநெறிகளிலிருந்து விலகிவிட்டதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ஏழு உறுப்பினர்களில் ஆறு பேர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
குடியரசுத் தலைவருடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பகவந்த் மான்,
ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிய ஆறு மாநிலங்களை உறுப்பினர்களும் பஞ்சாபில் உள்ள அக்கட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களால் தேர்வு செய்யப்பட்டவர்கள்.
தேர்வு செய்யப்பட்டவர் என்பதற்கும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது.
பஞ்சாபைச் சேர்ந்த ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் அனைவரும் கையெழுத்திட்ட ஆவணங்களையும், அந்த ஆறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் உறுப்பினர் பதவிகளை ரத்து செய்யக் கோரி முதல்வர் குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பித்தார்.
இதுதொடர்பாக பஞ்சாப் மானின் எக்ஸ் தளப் பதிவில்,
பஞ்சாபின் உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் போராட்டம் தடையின்றித் தொடர்கிறது.
இன்று, பஞ்சாபின் முக்கியப் பிரச்சினைகள் குறித்து விவாதிக்கவும், மாநிலத்தின் வலுவான குரலைக் குடியரசுத் தலைவரின் முன் எடுத்துரைக்கவும், ஆம் ஆத்மி கட்சியின் அனைத்து எமஎல்ஏக்களும் இணைந்து சென்றோம்.
ஆறு மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது முற்றிலும் அரசியலமைப்புக்கு முரணானது என்றும், ஜனநாயகத்தின் மீதான ஒரு "கொலை" என்றும் அவர் தெரிவித்தார். இவர் அவர் பதிவிட்டுள்ளார்.
Summary
Punjab Chief Minister Bhagwant Mann met with President Droupadi Murmu at Rashtrapati Bhawan on Tuesday and urged her to terminate the membership of six Rajya Sabha MPs from the state who recently switched allegiances to the BJP.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆம் ஆத்மி எம்.பி.க்கள் பாஜகவுக்கு தாவல்: பதவியை பறிக்க குடியரசுத் தலைவரிடம் பஞ்சாப் முதல்வா் கடிதம்

பாஜக எம்.பி. மீது பஞ்சாப் காவல் துறை வழக்குப் பதிவு

பாஜகவில் ஆம் ஆத்மி எம்பிக்கள்! குடியரசுத் தலைவரை சந்திக்கும் பஞ்சாப் முதல்வர்!

ஆம் ஆத்மியில் இருந்து விலகிய எம்.பி.க்களுக்கு பஞ்சாப் முதல்வர் கடும் கண்டனம்
விடியோக்கள்

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு



