அஸ்ஸாம் மாநிலத்தில் மூன்றாவது முறையாக பாஜக மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ளது.
அஸ்ஸாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் 82 இடங்களில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட காங்கிரஸ் கட்சி 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.
அசாம் சட்டப்பேரவைக்கு கடந்த 9 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில், 85.96% வாக்குகள் பதிவாகின. வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வந்தது.
முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டதைத் தொடர்ந்து, வாக்குப் பெட்டியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் காலை முதலே பாஜக முன்னிலைப் பெற்று வந்தது. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா ஜலுக்பாரி தொகுதியில் ஒரு லட்சத்து 12,186 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார். இதன் மூலம் காங்கிரஸ் வேட்பாளர் 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
ஆட்சி அமைக்க 64 தொகுதிகள் தேவை என்ற நிலையில், பாஜக 82 இடங்களைக் கைப்பற்றியது.
பாஜகவின் கூட்டணிகளான அசோன் கன பரிஷத் கட்சி 10 இடங்களிலும், போடோலாந்து மக்கள் முன்னணி 10 இடங்களிலும் வெற்றி பெற்றது.
இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜோர்ஹட் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் முதல்வர் முகமான கெளரவ் கோகாய் பாஜகவின் ஹிதேந்திரா நாத் கோஸ்வாமியிடம் 23,182 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
பாஜகவுக்கு முன்பு 50 ஆண்டுகள் தொடர்ந்து அஸ்ஸாமை ஆட்சி செய்துவந்த காங்கிரஸ், 3வது முறையாக பாஜகவிடம் தோல்வி அடைந்துள்ளது.
அஸ்ஸாமில் கட்சிகள் பெற்ற வாக்குகள்
பாஜக 37.81%
காங்கிரஸ் 29.84%
அசோன் கன பரிஷத் கட்சி 6.47%
போடோலாந்து மக்கள் முன்னணி 3.73%
சிபிஐ 0.04%
சிபிஎம் 0.47% வாக்குகளைப் பெற்றுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
3 தொகுதிகளில் மீண்டும் வெற்றி: கன்னியாகுமரி மாவட்டம் கோட்டை என்பதை நிரூபித்த காங்கிரஸ் கட்சி

மாற்றத்துக்கான 'விசில்'
மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி; கேரளத்தைக் கைப்பற்றியது காங்கிரஸ்; அஸ்ஸாமில் மீண்டும் பாஜக!

அஸ்ஸாமில் பாஜக அமோக வெற்றி: பிரதமர் மோடி வாழ்த்து!
விடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை



