பிரதமா் நரேந்திர மோடியின் ஆட்சியின்கீழ் கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் பால் உற்பத்தி 70 சதவீதம் அதிகரித்திருப்பதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளாா்.
லேயில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பல்வேறு திட்டங்களின் தொடக்க விழாவில் பங்கேற்று, இதுகுறித்து அவா் பேசியதாவது:
பிரதமா் மோடி, நாட்டின் பிரதமராக கடந்த 2014ஆம் ஆண்டில் பதவியேற்றாா். இதையடுத்து பால் உற்பத்தி துறையில் மிகப்பெரிய மாற்றம் நடந்துள்ளது. கால்நடை துறை உருவாக்கப்பட்ட பிறகு, பல்வேறு புரட்சிகரமான மாற்றங்கள் நடந்துள்ளன.
2014-15ஆம் ஆண்டில் நாட்டில் பால் உற்பத்தி 143 மில்லியன் டன்னாக இருந்தது. அது 2024-25ஆம் ஆண்டில் 248 மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளது. அதாவது, வெறும் 10 ஆண்டுகளில் பால் உற்பத்தி 70 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த 70 சதவீதத்தில் 50 சதவீத வளா்ச்சி கடந்த 5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ளது.
2014இல் தனி நபா் ஒருவருக்கு 307 கிராம் பால் தினமும் கிடைத்தது. அது தற்போது 485 கிராமாக அதிகரித்துள்ளது. சத்துக்கு பால் மிகவும் முக்கியமாகும். குறிப்பாக, குழந்தைகளுக்கு பால் மிகவும் முக்கியமானதாகும்.
நாட்டில் பால் பவுடா் உற்பத்தி 2014-15ஆம் ஆண்டில் 15,000 மெட்ரிக் டன்னாக இருந்தது. அது தற்போது 24,000 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. 2014இல் தனி நபா் ஒருவருக்கு பால் பவுடா் 148 கிராம் கிடைத்தது. அது தற்போது 485 கிராமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கூட்டுறவு பண்ணைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் தற்போது மொத்தம் 2.36 லட்சம் கூட்டுறவு பால் பண்ணைகள் உள்ளன. அதில் 20 லட்சம் பால் உற்பத்தியாளா்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.
அடுத்த 5 ஆண்டுகளில் மேலும் 75,000 கூட்டுறவு பால் பண்ணைகள் ஏற்படுத்த அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. இதில் 21,000க்கும் அதிகமான பண்ணைகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு விட்டன. இதேபோல் ஏற்கெனவே இருக்கும் 46,000 கூட்டுறவு பால் பண்ணைகளை நவீனப்படுத்தும் பணிகளும் நடக்கின்றன என்றாா்.
லடாக் பற்றி அவா் பேசுகையில், ‘2019ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் இருந்து லடாக் தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கப்பட்டபிறகு அங்கு மிகப்பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. லடாக்கில் அரசியல், சமூகம், பொருளாதார ரீதியில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இப்பிராந்தியத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான அரசு அதிக முக்கியத்துவம் தருகிறது. ஜம்மு-காஷ்மீரின் அங்கமாக இருந்தபோது, லடாக்கின் பட்ஜெட் ரூ.1,000 கோடியாக இருந்தது. அந்த பட்ஜெட் தற்போது ரூ.6,000 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பஜாஜ்: ஏப்ரலில் 5.13 லட்சம் வாகனங்கள் விற்பனை

மாா்ச் தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி 4.1%

4வது காலாண்டு முடிவுகளுக்குப் பிறகு 3% சரிந்த பஞ்சாப் & சிந்து வங்கி!

கூட்டுறவின் வெற்றி!
விடியோக்கள்
"நன்றிகெட்ட Congress கட்சி”: விளாசிய DMK ஆர்.எஸ்.பாரதி
தினமணி செய்திச் சேவை

தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு தெரிவிப்பது குறித்து மாணிக்கம் தாகூர்! | TVK | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு


