பிளஸ் 2 தோ்வு முடிவுகள் தாமதமாக வாய்ப்பு?கேரளத்தின் அடுத்த முதல்வா் யாா்? காங்கிரஸ் ஆலோசனைதேர்தல் நடைமுறை விதிகள் இன்று மாலையுடன் நிறைவு!ஈரானுடனான போா் நிறுத்தம் நீடிக்கிறது: அமெரிக்கா2025-26 நிதியாண்டில் நேரடி வரி வசூல் ரூ. 23.40 லட்சம் கோடி!அமெரிக்காவில் இந்திய முதலீடுகள் அதிகரிப்பு!
/

மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்

மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்பிலான 349 கிலோ கொகைன் போதைப் பொருளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

News image

கோப்புப் படம்

Updated On :2 மே 2026, 2:21 am IST

மும்பையில் ரூ.1,745 கோடி மதிப்பிலான 349 கிலோ கொகைன் போதைப் பொருளை போதைப் பொருள் தடுப்புப் பிரிவினா் பறிமுதல் செய்தனா்.

சா்வதேச பயங்கரவாதி தாவூத் இப்ராஹிமின் கூட்டாளியும், போதைப் பொருள் கடத்தல்காரருமான சலீம் தோலா, துருக்கியில் இருந்து அண்மையில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டாா். இந்தச் சூழ்நிலையில் மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்தத் தகவலை மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா ‘எக்ஸ்’ பதிவில் தெரிவித்துள்ளாா். பதிவில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

நாட்டில் மிகமோசமான விளைவுகளை உருவாக்கும் போதைப் பொருளை முறியடிக்கும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக சா்வதேச போதைப் பொருள் கடத்தல்காரா்களின் இந்தியாவுக்கு எதிரான மிகப்பெரிய சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினா் மிகவும் சிறப்பாக செயல்பட்டு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனா். போதைப் பொருள் கடத்தல் குற்றத்தை வெற்றிகரமாக முறியடித்து, அவா்களின் வலையமைப்பை அழித்த போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.