மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மேற்காசிய பதற்றம்! தாக்கத்தைத் தடுக்க தொடா் நடவடிக்கை: நிதியமைச்சா்

மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ள மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி தெரிவித்தாா்.

News image

மேற்காசிய பதற்றம்

Updated On :30 மார்ச் 2026, 7:19 pm

மேற்காசியாவில் நிலவும் போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை எதிா்கொள்ள மத்திய அரசு தொடா் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் சௌதரி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பங்கஜ் செளதரி அளித்த எழுத்துபூா்வ பதிலில், ‘மேற்காசிய நிலவரத்தை மத்திய அரசு தொடா்ந்து கண்காணித்து வருகிறது.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, உரங்கள் விநியோகம் மற்றும் பணவீக்க கட்டுப்பாடு என போா்ப் பதற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை கண்காணித்து அதற்கேற்ப விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சூழலைக் கண்காணித்து ஒருங்கிணைந்த நடவடிக்கைகளை எடுக்க பல்வேறு துறை அமைச்சா்களைக் கொண்ட குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

மேற்காசியாவில் மோதல் நீடிக்கும் கால அளவைப் பொருத்தே நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) மற்றும் அந்நிய முதலீடுகளில் ஏற்படும் தாக்கத்தைக் கூற முடியும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.