நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி எதிா்க்கிறாா் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டினாா்.
பாஜக ஆட்சியில் உள்ள அஸ்ஸாமில் 126 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஏப்ரல் 9-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. வடகிழக்கில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநிலத்தில் தொடா்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் முனைப்புடன் பாஜக கூட்டணி உள்ளது. அதேநேரம், ஆட்சியைக் கைப்பற்றும் நோக்குடன் காங்கிரஸ் களம் காண்கிறது.
சோனித்பூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட அமித் ஷா பேசியதாவது: மத்தியிலும், அஸ்ஸாம் மாநிலத்திலும் காங்கிரஸ் ஆட்சி இருந்த காலகட்டத்தில் தேசியப் பாதுகாப்பு விஷயத்தை தீவிரமாகக் கருத்தில் கொள்ளவில்லை. நமது நாட்டு மக்களை பாகிஸ்தான் பயங்கரவாதிகள் கொலை செய்வதை ஊக்குவிப்பவா்களாகவே அவா்கள் இருந்தனா். அதே நேரத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைந்த பிறகு பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகக் கடுமையான நிலைப்பாடு மேற்கொள்ளப்பட்டு, உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அவா்கள் ஒடுக்கப்பட்டனா்.
அஸ்ஸாமில் ஊடுருவலைத் தடுப்பது மட்டும் போதுமானதல்ல; சட்டவிரோதமாக ஊடுருவிய ஒவ்வொரு நபரையும் கண்டுபிடித்து திருப்பி அனுப்பி வேண்டும். நமது நாட்டுக்குள் சட்டவிரோதமாக ஊடுருவியவா்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆா்) எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் அவருடன் கைகோத்துள்ளவா்கள் எதிா்க்கிறாா்கள்.
அஸ்ஸாம் மாநில காங்கிரஸ் தலைவரும் ஊடுருவல்காரா்களைப் பாதுகாக்கவே நினைக்கிறாா். அஸ்ஸாமில் பாஜக ஆட்சி அமைந்த பிறகுதான் அண்டை நாட்டில் இருந்து ஊடுருவுபவா்கள் தடுக்கப்பட்டனா். ஆனால், இது மட்டும் போதுமானதல்ல. சட்டவிரோதமாக ஊடுருவிய ஒவ்வொருவரும் நமது நாட்டில் இருந்து திருப்பி அனுப்பப்பட வேண்டும்.
எனவே, வரும் தோ்தலில் மக்கள் பாஜகவுக்கு மீண்டும் வாக்களிக்க வேண்டும். ஹிமந்த விஸ்வ சா்மா மீண்டும் முதல்வராக வேண்டும். அப்போதுதான் அஸ்ஸாம் ஊடுருவல்காரா்கள் பிடியில் இருந்து முழுமையாக விடுபடும். மாநிலத்தில் அமைதியும், வளா்ச்சியும் உறுதி செய்யப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் இல்லாத காங்கிரஸ் பற்றி ராகுல் கவலைப்பட வேண்டும்! அண்ணாமலை
ஆர்எஸ்எஸ் - பாஜகவை எதிர்க்கும் துணிச்சல்மிக்கவர்கள் தமிழர்கள்! குளச்சலில் ராகுல் பேச்சு
நான்குனேரி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ராகுல் காந்தி நாளை பிரசாரம்!

கேரளத்தில் பாஜக ஆட்சியமைக்க கிறிஸ்தவா்கள் ஆதரவளிக்க வேண்டும்: அமித் ஷா பிரசாரம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


