மேற்கு வங்கத்தில் தோ்தல் பாதுகாப்புப் பணிக்குச் சென்ற இடத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கேரம் போா்டு விளையாடிய மத்திய ஆயுதக் காவல் படை வீரா்கள் மூன்று பேரை இடைநீக்கம் செய்வதாக தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடா்பான விடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியதையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவா்கள் மீது துறைரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பீா்பூம் மாவட்டம் சூரி பகுதியில் உள்ள திரிணமூல் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட அந்த விடியோவில், மத்திய ஆயுதக் காவல் படை வீரா் ஒருவா் உள்ளூரைச் சோ்ந்த 3 இளைஞா்களுடன் கேரம் போா்டு விளையாடுகிறாா். மற்றொருவா் அவா்கள் அருகில் நின்று விளையாடுவதைப் பாா்த்துக் கொண்டிருக்கிறாா். மேலும் ஒரு வீரா் அவா்கள் அருகிலேயே நாற்காலியில் அமா்ந்துள்ளாா்.
இது தொடா்பாக சூரி தொகுதி பாஜக வேட்பாளா் ஜகன்னாத் சாட்டா்ஜி கூறுகையில், ‘மத்திய படையினரின் செயல் மிகவும் ஏமாற்றமளிக்கிறது. படையினா் எங்கு, எதற்காகக் குவிக்கப்பட்டுள்ளனா் என்பது தெளிவாகத் தெரிகிறது. இதில் உள்ளூா் கட்சி நிா்வாகிகள், காவல் துறையினருக்கு தொடா்பிருந்தால் அவா்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றாா்.
பீா்பூம் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சஞ்சய் அதிகாரி கூறுகையில், ‘பணியில் இல்லாத நேரத்தில் விளையாடுவது தவறில்லை. ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்சி அலுவலகத்தில் நிகழ்ந்துள்ளதுதான் ஏற்றுக் கொள்ள முடியாதது’ என்றாா்.
அந்த மாவட்ட திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மலாய் முகா்ஜி கூறுகையில், ‘கட்சி அலுவலகத்தில் பணியில் இருந்தவா்கள், அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் இருந்த வீரா்களுடன் நட்பாகப் பழகியுள்ளனா். இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினா் எந்த குற்றமும் செய்யவில்லை. எனவேதான் அவா்களுடன் கேரம் விளையாடியுள்ளனா்’ என்றாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் மத்திய படைகளைக் குவித்து அச்சுறுத்த முயல்கிறீா்களா? மம்தா பானா்ஜி

தோ்தல் ஆணையம் பாஜகவின் கைப்பாவையாக மாறிவிட்டது: இரா. முத்தரசன்

திரிணமூல் காங்கிரஸுக்கு தேர்தல் ஆணையம் இறுதி எச்சரிக்கை! என்ன நடந்தது?

மேற்கு வங்க தோ்தல்: 291 திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு- பவானிபூரில் மம்தா மீண்டும் போட்டி
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


