கொல்கத்தா : திரிணமூல் காங்கிரஸுக்கு எதிரான குற்றப்பத்திரிகை என்ற பெயரில், மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரானதொரு அறிக்கையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை (மார்ச் 28) வெளியிட்டார். அதில், மம்தா தலைமையிலான ஆட்சியில் சிறுபான்மையினர் விவகாரத்தில் சமரசம், பெண்கள் பாதுகாப்பு, ஊழல், அரசியல் வன்முறை, பொருளாதார நலிவு ஆகியவற்ரைக் குறிப்பிட்டு கடும் விமர்சனங்கள் சுமத்தப்பட்டுள்ளன.
மேற்கு வங்க சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 152 இடங்களுக்கு ஏப்.23-ஆம் தேதி, மீதமுள்ள 142 இடங்களுக்கு ஏப்.29-ஆம் தேதி என இருகட்ட வாக்குப்பதிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கொல்கத்தாவில் இன்று(மார்ச் 28) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமித் ஷா, “மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலானது பயத்துக்கும் நம்பிக்கைக்கும் எதிரான சண்டை என்றும் வெளிநாட்டு ஊடுருவல், தேச பாதுகாப்பு மற்றும் சமரச அரசியலுக்கு எதிரானதொரு போராட்டம்” என்றும் குறிப்பிட்டார்.
அவர் பேசியதாவது : “15 ஆண்டுகளுக்கும் மேலான திரிணமூல் காங்கிரஸ் அரசின் மோசமான செயல்பாடுகளை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை இது. அவர்களது தவறான ஆட்சியின்கீழ், ஊழல் ஆய்வகமாக மேற்கு வங்கம் மாறிவிட்டது.
மம்தா பானர்ஜி இதர பிற்படுத்தப்பட்ட பிரிவு (ஓபிசி) பட்டியலில் 77 சமூகங்களை சேர்த்துள்ளார். அவற்றுள் 75 சமூகங்கள் இஸ்லாமிய சமூகங்களாகும்.
ஓபிசி பட்டியல் மதத்தின் அடிப்படையிலா தீர்மானிக்கப்படும்? பெரும்பான்மை சமூகம் இங்கே பெருமளவிலான அநீதியை எதிர்கொண்டிருக்கிறது” என்றார்.
Summary
Union Home Minister Amit Shah on Saturday sought to frame the 2026 West Bengal assembly elections as a "battle over infiltration, national security and appeasement politics", while releasing a political "charge sheet" against the TMC government and asserting that the outcome would have implications not only for the state but also for the country's security.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சோதனைக் களத்துக்கு தயாராகும் மேற்கு வங்கம்!

திரிணமூல் அரசின் ஊழல் பணத்தை மீட்போம்- மேற்கு வங்கத்தில் அமித் ஷா பிரசாரம்

என்னைக் கொல்ல சதி செய்தீர்களா?: அமித் ஷாவுக்கு மம்தா கேள்வி
மேற்கு வங்கம்: திரிணமூல் காங்கிரஸ் மீது அமித் ஷா குற்றப்பத்திரிகை தாக்கல்!
வீடியோக்கள்

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை

தவெக தலைவராக விஜய் செலுத்திய வாக்கு! | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை

பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு தொடக்கம்! | #Ajith | #EPS | #Seeman |
தினமணி செய்திச் சேவை

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

