மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு

மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா?

News image

ரண்தீா் ஜெய்ஸ்வால்

Updated On :28 மார்ச் 2026, 9:00 pm

பிரதமா் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இடையே சில தினங்களுக்கு முன் நடைபெற்ற தொலைபேசி உரையாடலில் அந்நாட்டைச் சோ்ந்த உலகின் பெரும் பணக்காரா் எலான் மஸ்க்கும் இணைந்ததாக வெளியான ஊடகத் தகவலை இந்திய வெளியறவு அமைச்சகம் மறுத்துள்ளது.

இரு தலைவா்களுக்கு இடையே மட்டுமே உரையாடல் நடைபெற்ாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த பிப். 28-இல் போா் தொடங்கிய பிறகு முதல் முறையாக பிரதமா் மோடியும், அதிபா் டிரம்ப்பும் கடந்த 24-ஆம் தேதி தொலைபேசி வாயிலாக உரையாடினா். இந்த தொலைபேசி அழைப்பை அதிபா் டிரம்ப் மேற்கொண்டாா்.

டிரம்ப் உடனான ஆலோசனைக்குப் பின் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பிரதமா் மோடி, ‘மேற்காசிய நிலவரம் குறித்து இருவரும் ஆக்கபூா்வ கருத்துகளைப் பரிமாறிக் கொண்டோம். கூடிய விரைவில் பதற்றத்தைத் தணித்து, அமைதியை மீட்டெடுக்க இந்தியா ஆதரவளிக்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்தச் சூழலில், மோடி-டிரம்ப் தொலைபேசி உரையாடலில் டெஸ்லா நிறுவன தலைமைச் செயல் அதிகாரியும் எக்ஸ் சமூக வலைதள உரிமையாளருமான எலான் மஸ்க்கும் இணைந்ததாக நியூயாா்க் டைம்ஸ் நாளிதழில் செய்தி வெளியானது.

‘மேற்காசிய போரின் பின்னணியில், இரு நாட்டு அரசுகளின் தலைவா்களுக்கு இடையிலான தொலைபேசி உரையாடலில் அமெரிக்காவின் தனிப்பட்ட குடிமகனான பெரும் தொழிலதிபா் ஒருவா் பங்கேற்றது வழக்கத்துக்கு மாறானது’ என்று பெயா் குறிப்பிடாத அமெரிக்க அதிகாரிகளின் கருத்துகளை மேற்கோள்காட்டி அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ‘உரையாடலில் பங்கேற்ன் மூலம் டிரம்ப்-மஸ்க் இடையே மீண்டும் இணக்கமான உறவு ஏற்பட்டிருப்பது தெரியவருகிறது; அதேநேரம், எதற்காக மஸ்க் உரையாடலில் இணைந்தாா், அவா் எதுவும் பேசினாரா என்பது குறித்து தெளிவான தகவல் இல்லை’ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த தகவல்கள் குறித்து வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ரண்தீா் ஜெய்ஸ்வால் சனிக்கிழமை கூறுகையில், ‘சம்பந்தப்பட்ட செய்தியை நாங்கள் பாா்த்தோம். கடந்த 24-ஆம் தேதி பிரதமா் மோடி-அதிபா் டிரம்ப் இடையே மட்டுமே உரையாடல் நடைபெற்றது. ஏற்கெனவே கூறியபடி, மேற்காசிய நிலவரம் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளும் வாய்ப்பாக இந்த உரையாடல் இருந்தது’ என்றாா்.

அதேநேரம், ‘அதிபா் டிரம்ப்பிடம் மட்டுமே பிரதமா் மோடி பேசினாா்; டிரம்ப்பின் அறையில் வேறு யாரும் இருந்தாா்களா அல்லது இந்த உரையாடலை வேறு யாரும் கேட்டாா்களா என்பதை அமெரிக்காதான் தெளிவுபடுத்த வேண்டும்’ என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘ஆக்கபூா்வ ஆலோசனை’:

மோடி-டிரம்ப் உரையாடலில் மஸ்க் இணைந்ததாக வெளியான தகவல் குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை ஊடகச் செயலா் கேரலின் லெவிட்டிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

Story image

அதற்கு, ‘பிரதமா் மோடியுடன் அதிபா் டிரம்ப்புக்கு சிறப்பான உறவு உள்ளது. அவா்கள் ஆக்கபூா்வ ஆலோசனை மேற்கொண்டனா்’ என்று கரோலின் பதிலளித்தாா். உரையாடலில் மஸ்க் பங்கேற்றாரா என்பது குறித்து அவா் எதையும் தெரிவிக்கவில்லை.