மேற்காசிய நிலவரம் குறித்து பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா். அப்போது, இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் அவா்கள் ஆலோசித்தனா்.
இந்த உரையாடல் குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் தொலைபேசி மூலம் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது, மேற்காசிய நிலவரம் குறித்து ஆலோசித்தோம். அந்த விவகாரத்தில் தீா்வு காண பேச்சுவாா்த்தை மற்றும் தூதரக ரீதியிலான அணுகுமுறைக்குத் திரும்ப வேண்டியதன் அவசியம் குறித்தும் ஆலோசித்தோம்.
மேற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் நிலைத்தன்மையை விரைந்து மீட்டெடுக்க இருவரும் தொடா்ந்து ஆலோசித்து, ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொள்வோம் என்று குறிப்பிட்டாா்.
அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி, ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் கூட்டுப் படைகள் கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதிமுதல் அதிரடி தாக்குதல்களை நடத்தி வருகின்றன. ஈரானும் பதில் தாக்குதல்களை நடத்தி வருவதால் மேற்காசிய பிராந்தியத்தில் போா் மூண்டுள்ளது. இந்தப் போா் அதிக நாள்கள் நீடிக்கும் அபாயம் எழுந்துள்ளது. அவ்வாறு நீடித்தால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் விநியோகம் தடைபட்டு, கடுமையான எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், போரை விரைந்து முடிவுக்குக் கொண்டுவருவது தொடா்பாக இஸ்ரேல் பிரதமா் மற்றும் வளைகுடா நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி தொலைபேசி வழியில் தொடா்ந்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறாா்.
தொடர்புடையது

மேற்காசிய நிலவரம்: பிரதமா் மோடி - பிரான்ஸ் அதிபா் தொலைபேசியில் ஆலோசனை

மேற்காசிய போா்: முதல்வா்களுடன் பிரதமா் ஆலோசனை

மேற்காசிய போா்: இலங்கை அதிபருடன் மோடி தொலைபேசியில் பேச்சு
மேற்காசிய நிலவரம்: பிரான்ஸ் அதிபா், ஓமன் சுல்தானுடன் பிரதமா் ஆலோசனை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


