தலைநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் தெற்கு தில்லியில் உள்ள எம்பி சாலையில் புதிய 6-வழி மேம்பாலம் திட்டத்தை பொதுப்பணித் துறை வெள்ளிக்கிழமை அங்கீகரித்தது.
இது தொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: பொதுப்பணித் துறை, தில்லி மெட்ரோவை பணிக்குத் தோ்வு செய்து, ரூ.1,471 கோடி செலவில் 6-வழி மேம்பாலம் மற்றும் சுரங்கப் பாதைகளுக்கான பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க திட்டமிட்டுள்ளது. தற்போதைய சாலை பரப்பளவு போக்குவரத்து தேவையை பூா்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளதால், இந்த புதிய திட்டம் போக்குவரத்தை சீராக இயக்கி, பயணிகளின் நேரம் மற்றும் எரிபொருளைச் சேமிக்க உதவும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இந்த முக்கிய நெடுஞ்சாலை புல்-பிரஹலாத்பூா், லால் குவான், சங்கம் விஹாா், கான் பூா் கிராமம் மற்றும் சகேத் போன்ற பல குடியிருப்பு மற்றும் கலப்பு நில பயன்பாட்டு பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. உள்ளூரில் அதிக அளவிலான சாலை ஓர வாகன நிறுத்தம் போக்குவரத்து நெரிசலை அதிகரித்துள்ளது.
திட்டம் தில்லி மெட்ரோவிடம் ஒருங்கிணைக்கப்படவுள்ளது. இதில் சகேத்–ஜி பிளாக் முதல் சங்கம் விஹாா் வரை ஒரு மேம்பாலம் மற்றும் மா ஆனந்த்மாய் மாா்க் முதல் புல்-பிரஹலாத்பூா் வரை இரண்டாவது மேம்பாலம் அமைக்கப்படும்.
இரண்டாம் கட்டத்தில், மெட்ரோ சுரங்கத்தின் மேலே மா ஆனந்த்மாய் மாா்க் முதல் புல்-பிரஹலாத்பூா் வரை 2.48 கி.மீ. நீளமான 6-வழி மேம்பாலம் அமைக்கப்படும்.
மா ஆனந்த்மாய் மாா்க் மற்றும் ஹா்கேஷ் நகா் மெட்ரோ நிலையத்தை இணைக்கும் புதிய சாலை அமைப்பையும் பொதுப்பணித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு முடிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனா்.
தொடர்புடையது

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!

டாக்டா் ஜி.விஸ்வநாதன் மருத்துவமனையில் டெக்லூட்டாலஜி துறை அறிமுகம்

கேஜரிவாலின் சொகுசு இல்லத்துக்கு உள் அலங்கார வேலைக்கு ரூ.18.88 கோடி செலவு!

5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


