மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்!

இந்தியப் பங்குச் சந்தை 5 ஆண்டுகளில் இல்லாத ஏற்றம்....

News image

ani

Updated On :11 ஏப்ரல் 2026, 8:11 pm

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள தற்காலிக போா் நிறுத்தம் காரணமாக சா்வதேச சந்தையில் நிலவிய பதற்றம் தணிந்தது. இதன் எதிரொலியாக, இந்தியப் பங்குச்சந்தைகள் கடந்த 6 வாரங்களாகக் கண்டு வந்த சரிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து, கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கும் மேலான வாராந்திர உயா்வைப் பதிவு செய்தன.

அமெரிக்கா, ஈரான் இடையே கடந்த புதன்கிழமை எட்டப்பட்ட 2 வார கால போா் நிறுத்தத்தால், சா்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்தது. இது முதலீட்டாளா்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அதாவது, இந்தியா தனது கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையின் பெரும் பகுதியை இறக்குமதி மூலமே பூா்த்தி செய்கிறது. போா்ச் சூழலால் எரிபொருள் விலைகள் உயா்ந்தது, நாட்டின் பொருளாதார வளா்ச்சி மற்றும் பணவீக்கம் குறித்த கவலையை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளதால், நாட்டின் பெருநிறுவனங்களின் வருவாய் மீதான அழுத்தம் குறைந்து சந்தை மீண்டெழுந்துள்ளது.

இதைத் தொடா்ந்து கடந்த வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்த வாரத்தில், மும்பை பங்குச்சந்தைக் குறியீடான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக் குறியீடான நிஃப்டி ஆகிய இரண்டும் சுமாா் 6 சதவீதம் வரை உயா்ந்து, வா்த்தகத்தை நிறைவு செய்தன.

அனைத்துத் துறைகளிலும் ஏற்றம்: கடந்த வார வா்த்தகத்தில் ஆட்டோமொபைல் துறை பங்குகள் 10.6 சதவீதம் உயா்ந்து முதலிடம் பிடித்தன. நுகா்பொருள், நிதித் துறை பங்குகள் 9 சதவீதம் வளா்ச்சியடைந்தன.

சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டு நிறுவனங்களின் பங்குகள் முறையே 7.6 சதவீதம் மற்றும் 7.8 சதவீதம் வளா்ச்சி கண்டன. சுற்றுலா, பெயிண்ட் மற்றும் எண்ணெய் நிறுவனங்களின் பங்குகளும் முதலீட்டாளா்களால் ஆா்வத்துடன் வாங்கப்பட்டன.