பிரான்ஸ் நாட்டில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் நேரில் சந்தித்து உரையாடியுள்ளார்.
பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் ஜி7 நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில், இந்தியா, பிரேசில் ஆகிய நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர். இந்தக் கூட்டத்தில், வளைகுடா போர் மற்றும் ஹோர்முஸ் நீரிணை விவகாரம் குறித்த முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரான்ஸின் செர்ன-ல-வில்லேவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) நடைபெற்ற கூட்டத்தின் ஒருபகுதியாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோவை, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இருப்பினும், இந்தச் சந்திப்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் குறித்து எந்தவொரு தகவலும் வெளியாகவில்லை.
ஏற்கெனவே, ஜி7 கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ரூபியோ நட்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களைச் சந்தித்து ரஷிய - உக்ரைன் போர், வளைகுடா போர் ஆகிய விவகாரங்களில் தேவைப்படும் ஒத்துழைப்புகள் குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்திருந்தது.
இத்துடன், இந்தக் கூட்டத்தில் இத்தாலியின் துணைப் பிரதமரும், அந்நாட்டின் வெளியுறவு அமைச்சருமான அண்டோனியோ தஜானி மற்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் ஜீன் நோயல் பாரட் ஆகியோரை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து உரையாடியது குறிப்பிடத்தக்கது.
Summary
Union External Affairs Minister Jaishankar met and held discussions in person with US Secretary of State Marco Rubio in France.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

ஈரானில் இருந்து இந்திய மீனவர்கள் மீட்பு! ஆர்மீனியாவுக்கு நன்றி தெரிவித்த மத்திய அரசு!

ஈரானின் ஏவுகணைகள் ஐரோப்பிய நாடுகளைத் தாக்கக் கூடும்! - அமெரிக்கா எச்சரிக்கை!

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


