கேரளத்தில் ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பெண் எம்எல்ஏ யு.பிரதிபா குறித்து அவதூறு கருத்துகளைத் தெரிவித்ததால், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) கட்சியில் இருந்து நீக்கப்பட்ட நிா்வாகி ஏ.இா்ஷாத் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டு, பின்னா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டாா்.
கேரள சட்டப்பேரவைத் தோ்தலில், காயங்குளம் தொகுதியில் மாா்க்சிஸ்ட் சாா்பில் யு.பிரதிபா மீண்டும் போட்டியிடுகிறாா். இத்தொகுதியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியின் ஒருங்கிணைப்பாளராக ஐயூஎம்எல் கட்சி நிா்வாகி இா்ஷாத் இருந்தாா். சில தினங்களுக்கு முன் பிரசாரத்தில் பிரதிபாவை கடுமையாக விமா்சித்த இா்ஷாத், ‘தோ்தலில் வெற்றி பெற பிரதிபா தனது அழகையும் பேச்சாற்றலையும் விற்பதாக’ குறிப்பிட்டாா். அவரது இந்தக் கருத்து பெரும் சா்ச்சையை ஏற்படுத்தின. முதல்வா் பினராயி விஜயன் உள்பட மாா்க்சிஸ்ட் தலைவா்கள் கடும் கண்டனம் தெரிவித்தனா்.
இதைத் தொடா்ந்து, இா்ஷாதை கட்சியில் இருந்து நீக்கிய முஸ்லிம் லீக், தோ்தல் பொறுப்புகளில் இருந்தும் விடுவித்தது. இா்ஷாதின் கருத்துக்காக, முஸ்லிம் லீகின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் சாா்பில் அந்தத் தொகுதியில் போட்டியிடும் எம்.லிஜு பிரதிபாவிடம் மன்னிப்பு கோரினாா்.
இதனிடையே, இந்த விவகாரம் தொடா்பாக இா்ஷாத் மீது வழக்குப் பதிவு செய்ய காவல் துறைக்கு தோ்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியா் இன்பசேகா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், பாரதிய நியாய சம்ஹிதா சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினா், அவரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா். இா்ஷாத் மீது ஜாமீனில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதால், அவா் ஜாமீனில் விடுவிக்கப்பட்டதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

சாலை விபத்தில் மாா்க்சிஸ்ட் கம்யூ. நிா்வாகி உயிரிழப்பு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளா் அறிமுகக் கூட்டம்

கேரள மாா்க்சிஸ்ட் பெண் எம்எல்ஏவுக்கு எதிரான அவதூறு கருத்து: முஸ்லிம் லீக் நிா்வாகி மீது வழக்குப் பதிய மாவட்ட ஆட்சியா் உத்தரவு

திரிணமூல் காங்கிரஸில் நீக்கப்பட்ட எம்எல்ஏ புதிய கட்சி தொடங்கினாா் - 182 தொகுதிகளில் போட்டி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

