மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

1,068 ஹெக்டேர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பு: ரயில்வே அமைச்சர்

சுமார் 1,068 ஹெக்டேர் ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்தது குறித்து...

News image

மத்திய ரயில்வே அமைச்சர் - IANS

Updated On :27 மார்ச் 2026, 11:03 am

சுமார் 1,068 ஹெக்டேர் பரப்பளவிலான ரயில்வே நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வெள்ளிக்கிழமை (மார்ச் 27) மாநிலங்களவையில் தெரிவித்தார்.

கேள்வி நேரத்தின்போது எழுப்பப்பட்ட துணைக் கேள்விகளுக்குப் பதிலளித்த அமைச்சர் கூறியிருப்பதாவது:

நாடு முழுவதும் இந்திய ரயில்வேக்குச் சொந்தமான சுமார் 1,068 ஹெக்டேர் நிலம் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும் இது மொத்தமாக உள்ள 4.99 லட்சம் ஹெக்டேர் நிலப்பரப்பில் வெறும் 0.21 சதவீதம் மட்டுமே என்றும் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள அனைத்து ரயில்வே நிலங்களின் பயன்பாட்டைப் பார்த்தால், கிட்டத்தட்ட 80 சதவிகித நிலம் தண்டவாளங்களுக்கு அருகிலும், 5 சதவீத நிலம் அதைச் சுற்றியும் உள்ளது. மீதமுள்ள 15 சதவிகித நிலம் ரயில் நிலையங்கள், குடியிருப்புகள், மருத்துவமனைகள் மற்றும் பிறவற்றின் மேம்பாட்டிற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும் கூறினார்.

மேலும்,நாட்டில் சுமார் 0.21 சதவிகித ரயில்வேக்கு சொந்தமான நிலம் சட்டவிரோத ஆக்கிரமிப்பில் உள்ளது என்றும் மாநிலங்களவையில் பதிலுரைத்தார்.

Summary

Railway Minister Ashwini Vaishnaw informed the Rajya Sabha on Friday (March 27) that about 1,068 hectares of railway land is under encroachment.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.