செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 28 நாள்களிலிருந்து 30 நாள்களாக மாறுமா என்ற கேள்விக்கு வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது.
இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையமான டிராய், தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கு, அடித்தால் வலிக்காததுபோல ஒரு உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
அதுதான், ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு, தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள், குறைந்தது ஒரே ஒரு ரீசார்ஜ் திட்டத்தையாவது 30 நாள்களுக்கு வழங்க வேண்டும் என்ற உத்தரவு.
அந்த அறிவிக்கையில் கூறப்பட்டிருப்பது என்னவென்றால், ஒவ்வொரு தொலைத்தொடர்பு சேவை நிறுவனமும் ஒரு ஒரே மாத திட்டம், ஒரே ஒரு சிறப்புக் கட்டண ரீசார்ஜ், காம்போ திட்டங்களின் காலத்தை 30 நாள்களுக்கு நீட்டித்து வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், நுகர்வோர், தங்களுக்கு பிடித்த வாய்ப்புகளைத் தெரிவு செய்து பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றும், ஒரு ஆண்டில் குறைந்தபட்சமாக 12 ரீசார்ஜ்களை மட்டுமே செய்ய வழி வகை ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதை அப்படியே தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்கள் மேற்கொள்ளுமா? அல்லது மக்களுக்கு ஏற்பில்லாத ஏதேனும் ஒரு ரீசார்ஜ் திட்டத்தை மட்டும் 30 நாள்களாக மாற்றி, அதற்கான கட்டணத்தையும் சற்று உயர்த்திவிட்டுக் கணக்குக் காண்பிக்குமா என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார்கள் மக்கள்.
Summary
Regarding whether cell phone recharge plans will change from 28 days to 30 days..
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஒரு முறை சார்ஜ் செய்தால் 142 கி.மீ. பயணம்! ரூ. 44,490க்கு மின்சார ஸ்கூட்டர்!

பராமரிப்புப் பணி: பழனியில் ஏப். 16-இல் ரோப் காா் சேவை நிறுத்தம்

செருப்பில் செல்போன்.. எய்ம்ஸ் தேர்வில் சிக்கிய மாணவர்

எரிபொருள் தட்டுப்பாடு! செல்போன் டவர், இணைய சேவை பாதிக்கும் அபாயம்!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



