எரிபொருள் தட்டுப்பாடு நீடித்தால் செல்போன் வலையமைப்பு, இணைய சேவைகள் பாதிக்கப்படலாம் என்று தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கவலை தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கு போர்ப் பதற்றம் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் எரிபொருள்கள் தடைப்பட்டுள்ளது.
இதன்காரணமாக கடந்த மூன்று நாள்களாக நாடு முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, ஹோட்டல்கள், கடைகள் உள்ளிட்டவைக்கு வழங்கப்படும் வணிகப் பயன்பாட்டு சிலிண்டர்கள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளன.
வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே சிலிண்டர்கள் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இதனடிப்படையில் தொலைத்தொடர்பு உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கும் கடந்த மார்ச் 5 ஆம் தேதி முதல் சிலிண்டர் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியுள்ளன.
இதனால், புதிய தொலைத்தொடர்பு கோபுரங்களை (டவர்) தயாரித்து நிறுவுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதே நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் படிப்படியாக டவர் தயாரிப்புகள் குறைக்கப்படும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு எரிவாயு தேவை ஏன்?
தொலைத்தொடர்பு கோபுரங்கள் பல உலோக செயலாக்க தொழில்நுட்பங்களை பயன்படுத்தி தயாரிக்கப்படுகின்றன. உலோகத்தை சூடாக்கவும், கோபுரங்களின் பாகங்கள் துரு மற்றும் சேதங்களில் இருந்து பாதுகாக்க பூச்சு பூசுவதற்கு எரிவாயு அத்தியாவசிய தேவையாக இருக்கின்றன.
இதுதொடர்பாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்துக்கு டிஜிட்டல் உள்கட்டமைப்பு வழங்குநர்கள் சங்கம் எழுதியிருக்கும் கடிதத்தில் டவர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு தேவையான எல்பிஜி, எல்என்ஜி வகை எரிவாயுகளை சீராக விநியோகிக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
மேலும், மின்வெட்டு ஏற்படும்போது தொலைத்தொடர்பு கோபுரங்கள் டீசல் ஜெனரேட்டர்கள் மூலம் இயக்கப்படுகின்றன. கோடைக் காலம் நெருங்குவதால் மின்வெட்டு அபாயமும் எழுந்துள்ளது.
இத்தகைய சூழலில் தொலைத்தொடர்பு கோபுரங்களுக்கு டீசல் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டால் செல்போன் நெட்வொர்க், இணைய சேவைகளை சீராக வழங்குவதில் சிக்கல் ஏற்படும்.
அதனால், தொலைத்தொடர்பு கோபுரங்களை இயக்குவதற்கு தேவையான டீசலையும் சீராக விநியோகிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
Summary
Fuel shortage! Cell phone towers, internet service at risk of being disrupted!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் எரிபொருள், எல்பிஜி விநியோகம் சீராக உள்ளது: முதல்வா் ரேகா குப்தா

ஒவ்வொரு நெருக்கடியிலும் ஏழைகள் முதலில் பலியாவது ஏன்? பிரதமருக்கு ராகுல் கேள்வி!

எரிபொருள் தட்டுப்பாடு: எகிறும் கட்டுப்பாடு

செல்போன் ரீ-சார்ஜ் திட்டங்கள் 30 நாள்களாக அதிகரிக்குமா?
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை



