மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

இஸ்ரேல் - ஈரான் போர்: முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

தில்லியில் முப்படைத் தளபதிகளுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டுள்ளது பற்றி...

News image

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை - ANI

Updated On :24 மார்ச் 2026, 6:38 am

மேற்காசியப் போர் நிலவரம் குறித்து பாதுகாப்புப் படை தளபதிகளுடன் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று(மார்ச் 24) ஆலோசனை மேற்கொண்டார்.

இஸ்ரேல் - ஈரான் இடையேயான போரால் உலகம் முழுவதும் பதற்றம் மற்றும் பல்வேறு பொருளாதாரச் சிக்கல்கள் எழுந்துள்ளன.

ஈரானின் ஹோர்முஸ் நீரிணை வழியாக கடல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் கச்சா எண்ணெய் பாதிப்பு, அதனால் சிலிண்டர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Story image

இந்நிலையில் மேற்காசியப் போர் நிலவரம் குறித்து தில்லியில் முப்படைத் தலைமைத் தளபதி அனில் சௌஹான், தரைப் படை, கடற் படை, விமானப் படை தளபதிகள் மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ஆகியோருடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

உலக நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் குறித்தும் இந்தியாவின் பாதுகாப்புத் தன்மையை மறுஆய்வு செய்யும் நோக்கிலும் இந்த கூட்டம் நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Iran war: Defence Minister Rajnath Singh chairs a review meeting with CDS General Anil Chauhan, the three service chiefs

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.