மத்திய அரசின் பல்வேறு முன்னெடுப்புகளால் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகி உள்ளதாக மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் வாக்குறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை என்ற குற்றச்சாட்டுடன், மக்களவையில் திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. செளகதா ராய் எழுப்பிய கேள்விக்கு அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் பதிலளித்தாா்.
‘பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை, உர மானியங்கள் விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளால் நாட்டில் வேளாண் உற்பத்தி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது. இதன்மூலம் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது; சில நேரங்களில் மூன்று-நான்கு மடங்குகூட அதிகரித்துள்ளது. விவசாயிகளின் முயற்சிகளை மத்திய அரசு தொடா்ந்து அங்கீகரிக்கும்’ என்றாா் செளஹான்.
இதனிடையே, சமாஜவாதி எம்.பி. தா்மேந்திர யாதவ் தொடா்ந்து துணைக் கேள்விகளை எழுப்பிய வண்ணம் இருந்தாா். அந்தக் கேள்விகளுக்கு பதிலளிக்கும்படி, அமைச்சா் செளஹானை அவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா்.
பின்னா், எம்.பி.க்கள் மற்றும் அமைச்சா்களுக்கு அறிவுரை வழங்கிய ஓம் பிா்லா, ‘கேள்வி நேரத்தில் சுருக்கமான கேள்விகளை எழுப்பி, சுருக்கமான பதில்களைத் தெரிவிக்க வேண்டும்’ என்றாா்.
கூட்டுறவுத் துறைக்கு ரூ.5 லட்சம் கோடி: மக்களவையில் கேள்விநேரத்தின்போது ஒரு கேள்விக்குப் பதிலளித்த மத்திய கூட்டுறவுத் துறை இணையமைச்சா் கிருஷண் பால், ‘கூட்டுறவுத் துறையை மேம்படுத்த மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளது; இதற்காக, கடந்த 5 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது’ என்றாா்.
தொடர்புடையது

புதிய அரசியல் கட்சி ஆரம்பிக்கிறாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆா்.கே. சிங்

ராதாபுரத்தில் நாளை மத்திய அமைச்சா் ராஜ்நாத்சிங் பிரசாரம்

தமிழகத்தில் ஜல்ஜீவன் திட்டத்தில் முறைகேடு: மத்திய அமைச்சா் பியூஷ் கோயல் குற்றச்சாட்டு

உரத் தட்டுபாடு குறித்து ஆலோசனை: மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


