ஹௌரா நகரில் மார்ச் 26 அன்று ராம நவமி ஊர்வலம் நடத்த கொல்கத்தா உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
ஹௌரா நகரில் லாப நோக்கற்ற அமைப்பு ஒன்று ராம நவமி ஊர்வலம் நடத்த காவல்துறை அனுமதி கோரியது. அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அமைப்பு சார்பில் மனுதாரர் அஞ்சனி புத்ர சேனா என்பவர் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
மனுதாரர் சார்பில் ஆஜரான மேற்கு வங்க தலைமை வழக்குரைஞர் கிஷோர் தத்தா, இந்த அமைப்பு கடந்த 25 ஆண்டுகளாக ராமநவமி ஊர்வலங்களை நடத்தி வருவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். அஞ்சனி புத்ர சேனா சார்பில் நடத்தப்படும் ஊர்வலத்தைக் காலை நேரத்தில் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் கோரினார்.
முன்னதாக, மார்ச் 20 அன்று அதே இடத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு சார்பில் ராமநவமி ஊர்வலத்தை மதியம் 3 மணி முதல் மாலை 6 மணி வரை நடத்த நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதனிடையே, விஷ்வ ஹிந்து பரிஷத் ஊர்வலத்திற்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாமல், மார்ச் 26 அன்று காலை 8.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ஊர்வலம் நடத்த அந்த அமைப்பிற்கு நீதிபதி சௌகதா பட்டாச்சார்யா அனுமதி அளித்தார்.
அதேசயமம், நிபந்தனைகளின்படி, ஊர்வலத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 500-ஐ தாண்டக்கூடாது என்றும், ஊர்வலத்தின்போது எந்தவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடாது.
ஊர்வலத்தில், அலங்கார ஊர்தி மற்றும் ஸ்ரீராமரின் திருவுருவச் சிலையை ஏற்றிச் செல்ல ஒரேயொரு வாகனம் மட்டுமே அனுமதிக்கப்படும். மேலும், ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் கொடிகள், அடையாளங்களை பிவிசி பொருள்களால் மட்டுமே செய்யப்பட்டிருக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Summary
The Calcutta High Court on Tuesday allowed a Ram Navami procession by an organisation in Howrah on March 26 but imposed strict restrictions on carrying weapons.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்

வருமான வரி- சென்னை உயர்நீதிமன்றத்தில் விஜய் மேல்முறையீடு
மாம்பழம் சின்னம் விவகாரம்: ராமதாஸுக்கு தொடர் பின்னடைவு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


