பிரதமர் மோடி மேற்காசிய நிலைமை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், அப்போது தான் அனைவராலும் கருத்து தெரிவிக்க முடியும் எனக் காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி வலியுறுத்தினார்.
மக்களவையில் பிரதமர் மோடி, மோதல் காலங்களில் இந்தியர்களைப் பாதுகாப்பே மிக உயர்ந்த முன்னுரிமையாக இருந்து வருகிறது, மத்திய அரசு இதுகுறித்து மிகுந்த உணர்வுடனும், விழிப்புணர்வுடனும் செயல்படுவதுடன், தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது. மேற்காசிய நிலைமை உலகப் பொருளாதாரம் மற்றும் மக்களின் வாழ்வாதாரங்கள் மீது பாதகமான தாக்கத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என்றும் இந்தச் சூழல் கவலைக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.
ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் சரக்கு போக்குவரத்து, போர் தொடங்கியதிலிருந்தே ஒரு சவாலாக இருந்து வருவதாகவும், எரிவாயு மற்றும் எரிபொருள் விநியோகம் மிகக் குறைந்த அளவிலேயே பாதிக்கப்பட்டுள்ளதை அரசு உறுதி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவிற்குத் தேவைப்படும் எல்பிஜி எரிவாயுவில் 60 சதவீதத்தை நாம் இறக்குமதி செய்கிறோம் என்பது அனைவருக்கும் தெரியும். விநியோகத்தில் நிலவும் நிச்சயமற்ற தன்மை காரணமாக உள்நாட்டு விநியோகத்திற்கே அரசு தற்போது முன்னுரிமை அளித்து வருகிறது. உள் நாட்டிலேயே எல்பிஜி உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
மேலும், மேற்கு ஆசியாவில் நிலவும் இந்த மோதல் சூழலானது, பொருளாதாரம், மனிதாபிமான விவகாரங்கள் மற்றும் தேசியப் பாதுகாப்பு தொடர்பானவை உள்ளிட்ட பல்வேறு எதிர்பாராத சவால்களை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
பிரதமரின் கருத்துகள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு.. நாடாளுமன்ற வளாகத்தில் பிரியங்கா காந்தி பதிலளித்தார்.
பிரதமர் மோடி நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மக்களுக்குத் தகவல் தெரிவித்தார் அவ்வளவுதான், புதிதாக எதையும் கூறிவிடவில்லை.
நாங்கள் விவாதத்திற்காக அளித்துள்ள அறிவிப்பின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெற வேண்டும். அப்போதுதான் நாங்களும் அதற்குப் பதிலளிக்க முடியும்.
அனைத்துத் தரப்பினரும் தங்கள் கருத்துகளை முன்வைக்க முடியும். நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான விவாதம் நடைபெற வேண்டும் என்று அவர் கூறினார்.
Summary
Prime Minister Narendra Modi did not say anything new in his statement on the West Asia situation in the Lok Sabha, Congress leader Priyanka Gandhi Vadra asserted on Monday and demanded a Parliament discussion so all sides can put forward their views in the matter.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு! நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி 3 மணிக்கு உரை!

அமெரிக்கா, இஸ்ரேலுக்குப் பணிந்துபோகிறார் பிரதமர் மோடி! - பிரியங்கா காந்தி தாக்கு!

பிரதமரின் தவறான கொள்கைகளால் மேற்காசிய போரின் தாக்கம் இந்தியாவில் அதிகரிப்பு - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
அமெரிக்காவுக்கு அடிமையாக இருக்கிறார் பிரதமர் மோடி! - பிரியங்கா காந்தி கடும் தாக்கு!
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


